இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் மற்றும் எக்ஸ் என இரு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த மாடல்களின் ரேஞ்ச், பேட்டரி, நுட்ப விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
ஐக்யூப் தோற்ற அமைப்பில் ஃபேமிலி எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவும், தற்பொழுது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலுக்கு இணையான ஸ்டைலை கொண்டிருப்பதனால் பொதுவான பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவருகின்றது. அடுத்து பிரீமியம் ஸ்டைலில் வெளியான எக்ஸ் உயர் ரக பிரிவில் அமைந்துள்ளது.
2024 TVS iQube
வழக்கமான வடிவமைப்பினை பெற்று மிக இலகுவாக அனுகும் வகையில் அமைந்துள்ள டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப் பேஸ் வேரியண்ட் மற்றும் S வேரியண்ட் என இரண்டு விதமாக கிடைக்கின்றது. இந்த இரு வேரியண்டிலும் பொதுவாக 3.04Kwh பேட்டரியை பெற்றுள்ளது.
இரு வேரியண்டுளும் ஈக்கோ மோடில் 70 முதல் 80 Km ரேஞ்சு வழங்கும் நிலையில் பவர் மோடில் அதிகபட்சமாக 55-60Km வழங்குகின்றது. இந்த மாடல்களின் டாப் ஸ்பீடு ஒரு மணி நேரத்துக்கு 78 கிமீ ஆகும். 650 வாட்ஸ் சார்ஜர் கொண்டு 0-80 % சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.
iQube நுட்பவிபரம் | iQube | iQube S |
பேட்டரி பேக் | 3.04 kWh | 3.04 kWh |
டாப் ஸ்பீடு | 78 km/h | 78 km/h |
ரேஞ்ச் (IDC claimed) | 100 கிமீ | 100 கிமீ |
பயணிக்கும் வரம்பு | 70 கிமீ | 75 கிமீ |
ரைடிங் மோட் | Eco, Power | Eco, Power |
17.78 செமீ கொண்ட டிஎஃப்டி கிளஸ்ட்டரில் 35க்கு மேற்பட்ட கனெக்ட்டிவ் வசதிகளை வழங்குவதுடன் 7 நிறங்களில் கிடைக்கின்ற 2024 டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1,35,157 முதல் ரூ.1,40,760 வரை உள்ளது.
TVS X
டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்கின்ற பிரீமியம் மாடலான X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆனது 4.4 Kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7 kw பவரை வழங்கும் PMSM மோட்டார் அதிகப்படியான பவர் 11 Kw வெளிப்படுத்தும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 140 கிமீ ரேஞ்சு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் ஸ்டைல் மாறுபட்ட டிசைன் கொண்ட இந்த மாடல் ஆன் ரோடு விலை ரூ.2.80 லட்சத்தை எட்டுவதனால் பெரிதாக யாரும் இந்த மாடலுக்கு ஆர்வம் காட்டவில்லை.