டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310

வரும் மே 28 ஆம் தேதி டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி RR 310 பல்வேறு மாற்றங்கள் கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. பவர் மற்றும் தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டதாக விளங்கும் என கருதப்படுகின்றது.

கடந்த டிசம்பர் 2017-ல் விற்பனைக்கு வெளியான டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவான முதல் ஃபேரிங் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலின் டீசர் வீடியோவினை Crafted to be invisible என்ற கோஷத்துடன் வெளியிட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310

விற்பனையில் உள்ள அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் 313 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 34 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுதுகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.

புதிதாக வரவுள்ள மாடல் தோற்ற மாற்றங்கள், பாடி கிராபிக்ஸ் தவிர என்ஜின் சார்ந்த நுட்பத்தில் சில மாற்றங்களை பெற்று கூடுதல் பவர், கட்டுப்படுத்தப்பட்ட என்ஜின் அதிர்வுகள் மற்றும் வேகம் அதிகரித்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

ரேஸ் மற்றும் டிராக்கில் பயணிக்க ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் விலை தற்போது 2.24 லட்சம் ரூபாய் என எக்ஸ்-ஷோரூம் கிடைக்கின்றது. புதிய மாடல் விலை கனிசமாக உயர்த்தப்பட்டிருக்கலாம்.