இந்தாண்டின் பிப்ரவரி மாத்தில் டிவிஎஸ் NTORQ 125 அறிமுகம் செய்யப்பட்டது. 125cc கொண்ட இந்த ஸ்கூட்டர்கள், டிவிஎஸ் ரேஸிங் ஹெரிடேஜ்ஜில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் டிசைன்கள், ஸ்டீல்த் ஏர்கிராப்ட் வடிவிலும், மிகவும் ஆர்ப்பாட்டமான மற்றும் சமீப காலமான பிரபலமான ஸ்கூட்டர் என்ற நிலையை எட்டியுள்ளது. NTORQ 125 ஸ்கூட்டர்களின் விற்பனை ஒரு லட்சத்தை தொட்டுள்ள நிலையில், தற்போது புதிய மெட்டாலிக் ரெட் கலர் ஆப்சனை அறிமுகம் டிவிஎஸ் நிறுவனம் செய்துள்ளது.
NTORQ 125 ஸ்கூட்டர்களில், டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் பொருத்தப்பட்டுள்ளது. இவை ப்ளூடூத் வழியாக மொபைல் போனுடன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட்டில் நேவிகேஷன் அசிஸ்ட், டாப் ஸ்பீட் ரெக்கார்ட்டர், பில்ட் இன் லேப் டைம்மர், சர்விஸ் ரீமைண்டர் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஸ்கூட்டர்கள் 124,79cc சிங்கிள் சிலிண்டர், 3-வால்வ், ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.4PS ஆற்றல் மற்றும் 10.5Nm டார்க்யூ கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் 95 km/hr ஆக இருக்கும்.
டிவிஎஸ் NTORQ 125 ஸ்கூட்டர்கள், தற்போது மெட்டாலிக் ரெட் கலரில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி மெட்டாலிக் ப்ளூ மற்றும் மெட்டாலிக் கிரே, மேட் எல்லோ, மேட் ஒயிட், மேட் கிரீன் மற்றும் மேட் ரெட் கலரிலும் விற்பனைக்கு வந்துள்ளது.