இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களில் முன்னணி ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் பேட்டரி, ரேஞ்சு, செயல்திறன், சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் பற்றி அறிந்து கொள்ளலாம்.
25 கிமீக்கு குறைவான வேகம் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என இருபிரிவில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒகினவா Okhi-90, ஐப்ரைஸ்+, ஐப்ரைஸ் புரோ , டூயல் 100, ரிட்ஜ் 100, மற்றும் ரிட்ஜ் + போன்ற மாடல்கள் ஹைஸ்பீடு ஸ்கூட்டர்களாகும், குறைந்த வேகத்தில் லைட் மற்றும் R30 ஆகியவை உள்ளன.
ஒகினவா நிறுவனத்தின் மேக்ஸி ஸ்டைல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான OKHI-90 அதிகபட்சமாக 80-90Kmph வரை வெளிப்படுத்துகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 160 KM/Charge சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொண்டு 16 அங்குல வீல் பெற்றுள்ளது.
ஒகினவா ஒகி-90 எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,86,006 ஆகும்.
Okinawa OKHI-90 Specification | |
Battery pack | 3.6 kWh |
Top Speed | 80-90 km/h |
Range (IDC claimed) | 160 km |
Real Driving Range | 100-120 km |
Charging Time | 5-6 hrs |
Riding modes | Eco, Reverse |
ஒகினவா OKHI-90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,95,645 ஆகும்.
இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் ஒன்றான ஒகினவா ஐபிரைஸ் பிளஸ் ஸ்கூட்டரில் 2.7kw பவரை வழங்கும் மோட்டார் பொருத்தப்பட்டு சிங்கிள் சார்ஜில் 137KM வழங்குகின்றது. 90/90-12 அங்குல வீல் கொடுக்கப்பட்டு இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளது. கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்குகின்றது.
ஒகினவா ஐபிரைஸ் பிளஸ் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,45,965 ஆகும்.
Okinawa iPraise+ Specification | |
Battery pack | 3.6 kWh |
Top Speed | 56 km/h |
Range (IDC claimed) | 137 km |
Real Driving Range | 80-100 km |
Charging Time | 4-5 hrs |
Riding modes | – |
தமிழ்நாட்டில் ஒகினவா iPraise+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,52,945 ஆகும்.
ஒகினவா ஐபிரைஸ் புரோ மின்சார ஸ்கூட்டரில் 2.7kw பவரை வழங்கும் மோட்டார் பொருத்தப்பட்டு சிங்கிள் சார்ஜில் 81KM வழங்குகின்றது. 90/90-12 அங்குல வீல் கொடுக்கப்பட்டு இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளது. கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்குகின்றது.
ஒகினவா ஐபிரைஸ் புரோ எக்ஸ்ஷோரூம் விலை ₹ 99,645 ஆகும்.
Okinawa iPraise Pro Specification | |
Battery pack | 2.08 kWh |
Top Speed | 56 km/h |
Range (IDC claimed) | 81 km |
Real Driving Range | 60 km |
Charging Time | 4-5 hrs |
Riding modes | – |
தமிழ்நாட்டில் ஒகினவா ஐ பிரைஸ் புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,05,645 ஆகும்.
60kmph வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஒகினவா டூயல் 100 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.12 kWh பேட்டரி வழங்கப்பட்டு இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொடுத்து முழுமையான சிங்கிள் சார்ஜில் 129km வழங்கும். வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களை கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.
ஒகினவா dual 100 எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,19,085 ஆகும்.
Okinawa Dual 100 Specification | |
Battery pack | 3 kWh |
Top Speed | 60 km/h |
Range (IDC claimed) | 129 km |
Real Driving Range | 75-95 km |
Charging Time | 4-5 hrs |
Riding modes | – |
தமிழ்நாட்டில் ஒகினவா டூயல் 100 மின்சார ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,26,645 ஆகும்.
அதிகபட்சமாக 60kmph வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஒகினவா ரிட்ஜ் 100 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.12 kWh பேட்டரி வழங்கப்பட்டு இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொடுத்து முழுமையான சிங்கிள் சார்ஜில் 149km/charge வழங்கும். 3.00 – 10 டயர் வழங்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றுள்ளது.
ஒகினவா ரிட்ஜ் 100 எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 1,15,311 ஆகும்.
Okinawa Ridge 100 Specification | |
Battery pack | 3.12 kWh |
Top Speed | 45 km/h |
Range (IDC claimed) | 149 km |
Real Driving Range | 110 km |
Charging Time | 5-6 hrs |
Riding modes | – |
ஒகினவா ரிட்ஜ் 100 மின்சார ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 1,23,645 ஆகும்.
ரிட்ஜ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் அல்லாத என இருவிதமான வேரியண்டில் கிடைக்கின்றது. 3.12 kWh பேட்டரி வழங்கப்பட்டு இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொடுத்து முழுமையான சிங்கிள் சார்ஜில் 149km/charge வழங்கும். 3.00 – 10 டயர் வழங்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றுள்ளது.
ஒகினவா ரிட்ஜ்+ GPS எக்ஸ்ஷோரூம் விலை ₹ 90,006 மற்றும் ரிட்ஜ்+ ₹ 84,606 ஆகும்.
Okinawa Ridge+Specification | |
Battery pack | 1.7 kWh |
Top Speed | 45 km/h |
Range (IDC claimed) | 81 km |
Real Driving Range | 60 km |
Charging Time | 2-3 hrs |
Riding modes | – |
ஒகினவா ரிட்ஜ்+ GPS தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 96,506 மற்றும் ரிட்ஜ்+ ₹ 92,606 ஆகும்.
பொதுவாக இந்நிறுவனம், தனது ஸ்கூட்டர்களுக்கு மோட்டார் வாரண்டி 3 வருடம் அல்லது 30,000 கிமீ மற்றும் பேட்டரிக்கு 3 வருட வாரண்டி வழங்குகின்றது.
குறிப்பாக, மற்ற நிறுவனங்களின் ஸ்கூட்டர்களை விட ஒகினவா விலை அதிகமாக இருபதற்கு காரணம் FAME-2 மானியம் தற்காலிகமாக ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் ஒகினவா என இரு நிறுவனங்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. FAME-1 நடைமுறையில் இருந்த பொழுது உதிரிபாகங்கள் உள்நாட்டில் இருந்து பெறப்பட்டதாக மோசடியில் ஈடுபட்டதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
குறைந்த வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களாக ஒகினவா R30 மற்றும் லைட் உள்ளன. இரண்டு மாடலுக்கும் வாகனப்பதிவு மற்றும் லைசென்ஸ் தேவையில்லை. 250 W மோட்டார் கொடுக்கப்பட்டு அதிகபட்ச வேகம் 25 Km/hr ஆகும்.
ஒகினவா R30 எக்ஸ்ஷோரூம் விலை ₹ 61,998 மற்றும் Lite ₹ 66,993 ஆகும்.
Okinawa R30 and Lte Specification | |
Battery pack | 1.25 kWh |
Top Speed | 25 km/h |
Range (IDC claimed) | 60 km |
Real Driving Range | 50 km |
Charging Time | 4-5 hrs |
Riding modes | – |
ஒகினவா R30 தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 66,400 மற்றும் ரிட்ஜ்+ ₹ 71,616 ஆகும்
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலைகளும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் ஆகும். விலை விபரம் அனைத்தும் தோராயமானதாகும்.