Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஓலா S1X vs S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்சு ஒப்பீடு

by automobiletamilan
August 16, 2023
in பைக் செய்திகள், Bike Comparison
2
SHARES
0
VIEWS
ShareRetweet

ola-s1x vs s1 air electric scooter

ரூ.1.20 லட்சத்தில் அமைந்துள்ள இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான ஓலா S1X, S1X+ Vs S1 Air ஆகிய நான்கு மாடல்களின் ரேஞ்சு, பெர்ஃபாமென்ஸ், வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்து சிறந்த மற்றும் நமக்கு ஏற்ற மாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.

குறைந்த விலையில் வந்துள்ள எஸ்1எக்ஸ் மற்றும் எஸ்1ஏர் மாடல்கள் சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஏதெர் 450எஸ் ஸ்கூட்டருடன் போட்டியிடுவதுடன் டிவிஎஸ் அறிமுகம் செய்ய உள்ள குறைந்த விலை ஐக்யூப் மாடலையும் எதிர்கொள்ள உள்ளது.

Table of Contents

  • Ola S1X vs S1X+ vs S1 Air
  • சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு
  • பரிமாணங்கள் ஒப்பீடு

Ola S1X vs S1X+ vs S1 Air

ரூ.90,000 முதல் ரூ.1.20 லட்சம் விலைக்குள் அமைந்துள்ள ஓலா எஸ்1எக்ஸ், ஓலா எஸ்1எக்ஸ் பிள்ஸ் மற்றும் எஸ1 ஏர் ஸ்கூட்டர்கள் 2Kwh மற்றும் 3Kwh பேட்டரி ஆப்ஷனை பயன்படுத்திக் கொண்டு வழக்கமான ஓலா ஸ்கூட்டர்களை போலவே அமைந்துள்ளது.

S1X ஸ்கூட்டரில் உள்ள மூன்று வேரியண்டில் 2Kwh பேட்டரியை பயன்படுத்திக் கொள்ளும் மாடல் சிங்கிள் சார்ஜில் 91 கிமீ ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, 3kwh பயன்படுத்திக் கொள்ளும் S1X 3kwh, S1X+ மற்றும் S1 Air சிங்கிள் சார்ஜில் 151 கிமீ ரேஞ்சு வழங்கும் என சான்றயளிக்கப்பட்டுள்ளது.

Ola SpecsS1X S1X+, S1X 3kwhS1 Air
மோட்டார் வகைHubHubHub
பேட்டரி2Kwh3kwh3kwh
பவர்2.7kw/6kW2.7kw/6kW2.7kw/6kW
டார்க்–––
ரேஞ்சு (IDC)91 Km/charge151 Km/charge151 Km/ch
ரைடிங் ரேஞ்சு60-75 Km/charge120-125 Km/charge120-125km/ch
அதிகபட்ச வேகம்85 Kmph91 Kmph91 Kmph
சார்ஜிங் நேரம்7 hrs 40 Mins7 hrs 40 mins5 hrs
ரைடிங் மோடுEco, Normal, SportsEco, Normal, SportsEco, Normal, Sports

சார்ஜிங் நேரத்தை பொறுத்தவரை வீட்டிலுள்ள சார்ஜரை பயன்படுத்தினால் S1X, S1X 3kwh , S1X+ என மூன்றும் 7 மணி நேரம் 40 நிமிடமும், S1 ஏர் மாடல் 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். S1X+, S1X 3kwh என இரண்டு மாடலும் 500 வாட்ஸ் சார்ஜருடன் வருகின்றது. S1X 2kwh மாடல் 500 வாட்ஸ் சார்ஜருடன், S1 ஏர் மாடல் 750 வாட்ஸ் சார்ஜரை பெறுகின்றது.

ola s1 air escooter price

சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு

நான்கு மாடல்களுமே சஸ்பென்ஷன் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர், இரு டயர்களில் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் அமைப்பு என அனைத்திலும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றது. பொதுவாக அனைத்து மாடலிலும் 90/90-12 டயராக உள்ளது.

SpecsS1X/S1X+S1 Air
முன் சஸ்பென்ஷன்டெலிஸ்கோபிக்டெலிஸ்கோபிக்
பின் சஸ்பென்ஷன்மோனோஷாக்மோனோஷாக்
பிரேக்கிங் சிஸ்டம்CBSCBS
முன்பக்க பிரேக்130 mm டிரம்130 mm டிரம்
பின்பக்க பிரேக்130 mm டிரம்1300 mm டிரம்
வீல் F/R90/90-12 (F/R) ட்யூப்லெஸ்90/90-12(F/R) ட்யூப்லெஸ்

பரிமாணங்கள் ஒப்பீடு

SpecsS1X/S1X+S1 Air
எடை101 Kg/108kg108 Kg
இருக்கை உயரம்805mm805mm
கிரவுண்ட் கிளியரன்ஸ்160mm160mm
நீளம்1,860mm1,860mm
அகலம்738mm738mm
உயரம்1,298mm1,298mm
வீல் பேஸ்1,359mm1,359mm
சேசிஸ்ட்யூப்லெர்ட்யூப்லெர்

ஓலா S1X, ஓலா S1X+ மற்றும் S1 Air என நான்கு மாடலுமே ஒரே மாதிராயான நுட்ப விபரங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன.

ola s1x escooter

மிக முக்கியமான வித்தியாசங்கள்

S1X 2kwh மற்றும் S1X 3kwh என இரு மாடலிலும் 3.5 அங்குல கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் இல்லாமல் வந்துள்ளது. வழக்கமான கீ ஆனது இடம்பெற்றுள்ளது.

ஓலா S1X+ வேரியண்டில் 5 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த OTA மேம்பாடு, ம்யூசிக், நேவிகேஷன், க்ரூஸ் கண்ட்ரோல் அம்சங்களை பெற்றதாக உள்ளது. மேலும் கீலெஸ் அன்லாக் உள்ளது.

ஓலா S1 ஏர் 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த OTA மேம்பாடு, ம்யூசிக், நேவிகேஷன், க்ரூஸ் கண்ட்ரோல் அம்சங்களை பெற்றதாக உள்ளது. மேலும் கீலெஸ் அன்லாக் உள்ளது.

ola-s1x-vs-s1-air-electric-scooter

விலை ஒப்பீடு

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நான்கு ஸ்கூட்டர் மாடல்களும் வெவ்வேறு விதமான பேட்டரி மற்றும் ரேஞ்சு கொண்டிருந்தாலும் வடிவமைப்பில் ஒரே மாதிரியாகவும், மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் மாற்றமில்லாமல் அமைந்துள்ளது.

ModelEx-Showroom  Tamil Nadu
Ola S1XRs.89,999
Ola S1XRs.99,999
Ola S1X+Rs.1,09,999
Ola S1 AirRs.1,19,999

Ola S1X S1X+ Vs Ola S1 Air On-road Price in Tamil Nadu

ஓலா எஸ்1 வரிசை மாடல்கள் ஏதெர் 450s, டிவிஎஸ் ஐக்யூப், விடா வி1, போன்ற மாடல்களுடன் பல்வேறு போட்டியாளர்கள் இந்த ஸ்கூட்டர்களுக்கு சவாலாக அமைந்துள்ளன. தோராயமான ஆன்-ரோடு விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

Modelon-Road  Tamil Nadu
Ola S1XRs1,01,269
Ola S1XRs.1,12,658
Ola S1X+Rs.1,23,679
Ola S1 AirRs.1,34,040

மேலும் படிக்க – ஓலா S1 Air Vs S1 Pro Gen1 ஒப்பீடு

ஏதெர் 450S vs 450X ஒப்பீடு

Tags: Electric ScooterOla S1 AirOla S1X
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan