QJ மோட்டார்ஸ் பைக்குகளின் விலை ரூ.40,000 குறைப்பு

qj bikes 2024

QJ மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகின்ற SRC 250, SRC 500, மற்றும் SRV300 ஆகிய ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மாடல்களின் விலை ரூ.31,000 முதல் அதிகபட்சமாக ரூ.40,000 வரை விலையை குறைத்துள்ளது.

ஆதீஸ்வர் ஆட்டோ ரைட் கீழ் செயல்படுகின்ற மோட்டோவாலட் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்ற QJ மோட்டாரின் டீலர்கள் 28 எண்ணிக்கையில் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை மற்றும் திருச்சி மாநகரங்களில் உள்ளன.

QJ Motors Price slashed

சீனாவை தலைமையிடமாக கொண்ட QJ மோட்டார் நிறுவனம் தன்னுடைய SRC 250 பைக்கில் பேரலல் இன்லைன் ட்வீன் சிலிண்டர் 249cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 17.4Hp பவரை 8000RPMல்,  டார்க் 17Nm ஆனது 6000RPMல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பாக QJ SRC 250 மாடல் விலை ரூ. 2.10 லட்சத்திலிருந்து ரூ.31,000 வரை குறைக்கப்பட்டு தற்பொழுது ரூ.1.79 லட்சம் ஆக உள்ளது. குறிப்பாக இந்த விலையில் இந்திய சந்தையில் கிடைக்கின்ற ட்வீன் சிலிண்டர் பெற்ற மாடலாகும்.

QJ SRC 250

ரெட்ரோ கிளாசிக் ஸ்டீரிட் ஸ்டைலை பெற்றுள்ள QJ SRC 500 பைக்கில் ஒற்றை சிலிண்டர் 480cc ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5,750RPMல் 25.5Hp,  டார்க் 36Nm ஆனது 4,250RPMல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பாக QJ SRC 250 மாடல் விலை ரூ. 2.79 லட்சத்திலிருந்து ரூ.40,000 வரை குறைக்கப்பட்டு தற்பொழுது ரூ.2.39 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

QJ SRC 500

அடுத்து, இந்திய சந்தையில் கிடைக்கின்ற குறைந்த விலை கீவே பென்டா V302C மாடலுக்கு போட்டியான 296cc  லிக்யூடு கூல்டு V-ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்ற QJ SRV 300 பைக் அதிகபட்சமாக 9,000RPMல் 30.3Hp,  டார்க் 26Nm ஆனது 6,000RPMல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பாக QJ SRV 300 மாடல் விலை ரூ. 3.59 லட்சத்திலிருந்து ரூ.40,000 வரை குறைக்கப்பட்டு தற்பொழுது ரூ.3.19 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

qj motors srv 300

குறிப்பாக க்யூஜே மோட்டார் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு, டிரையம்ப், ஹோண்டா சிபி350 உள்ளிட்ட மாடல்களுடன் ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளை எதிர்கொள்ளுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *