மிகவும் ஸ்டைலிஷான எலெக்ட்ரிக் பைக் மாடலான ரிவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 சென்னையில் விற்பனைக்கு வெளியிட உள்ளதை உறுதி செய்யும் வகையில் வள்ளூவர் கோட்டத்தை தனது ட்வீட்டர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.
ரிவோல்ட் ஆர்வி400 பேட்டரி விபரம்
இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி ஆனது பைக்கினில் இருக்கும்போது சார்ஜ் செய்யவோ அல்லது (போர்டெபிள்) பேட்டரியை தனியாக எடுத்தும் சார்ஜ் செய்யும் வகையில் வழங்கப்பட்டு, 15A ஆன் போர்டு சார்ஜர் வாயிலாக பேட்டரியை 4 மணி நேரத்துக்குள் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும் நீங்கள் பயணித்தில் இருக்கும்போது திடீரென பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்தால், உடனடியாக ரிவோல்ட் ஆப் வாயிலாக அருகில் உள்ள ஸ்வாப் பேட்டரி மையத்தை அனுகினால் உடனடியாக முழுமையான சார்ஜிங் உள்ள மாற்று பேட்டரி வழங்கப்படும். உங்கள் இருப்பிடம் அல்லது நீங்கள் கோரும் இடத்தில் வழங்க ரிவோல்ட் திட்டமிட்டுள்ளது.
45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும் 80 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.
அடுத்ததாக குறைந்த ரேஞ்ச் பெற்ற ஆர்வி 300 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5kW ஹப் மோட்டார் மற்றும் 2.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 65 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 85 கிமீ -150 கிமீ ஆகும்.
ஆர்வி 300 பைக்கில் 25 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 150 கிமீ பயணம், 45 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும் 60 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. இந்த மாடலில் கிரே மற்றும் பிளாக் என இரு நிறங்கள் பெற்றுள்ளது.
ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் விலை பட்டியல்
ரிவோல்ட் ஆர்வி 300 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.2,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.
ரிவோல்ட் ஆர்வி 400 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,499 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.
ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.
ரிவோல்ட் ஆர்வி 300 விலை ரூ. 1,10, 963
ரிவோல்ட் ஆர்வி 400 விலை ரூ. 1,29,463
ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் விலை ரூ. 1,47,963
(ஆன்ரோடு விலை)