சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரிவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி 300 மற்றும் ஆர்வி 400 என இரு எலக்ட்ரிக் பைக்குளுக்கான முன்பதிவு செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2019 வரையிலான இரு மாதங்களுக்கான விற்பனை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 25 முதல் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த மாத மத்தியில் 2,500 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்ட நிலையில் தற்போது முன்பதிவு எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. 90 சதவீதத்துக்கு அதிகமான முன்பதிவு டாப் வேரியண்டிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு டெல்லி மற்றும் புனே நகரங்களில் மட்டும் நடைபெற்று வருகின்றது.
குறைந்த ரேஞ்ச் பெற்ற ஆர்வி 300 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5kW ஹப் மோட்டார் மற்றும் 2.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 65 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 85 கிமீ -150 கிமீ ஆகும்.
ரிவோல்ட் ஆர்வி 300 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.2,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.
ஆர்வி 400 பைக்கில் 3 kW ஹப் மோட்டார் மற்றும் 3.42 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 85 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 80 கிமீ -150 கிமீ ஆகும்.
ரிவோல்ட் ஆர்வி 400 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,499 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.
ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.
இறுதியான ஆன்ரோடு விலை
ரிவோல்ட் ஆர்வி 300 விலை ரூ. 1,10, 963 + 5,000 (4ஜி எல்டிஇ ஆதரவு சிம் கார்டு செயல்படுத்த)
ரிவோல்ட் ஆர்வி 400 விலை ரூ. 1,29,463+5,000 (4ஜி எல்டிஇ ஆதரவு சிம் கார்டு செயல்படுத்த)
ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் விலை ரூ. 1,47,963
ரிவோல்ட் ஆர்வி 300 Vs ஆர்வி 400 Vs ஆர்வி 400 ப்ரீமியம் வித்தியாசம்