Categories: Bike News

ரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு

rv 400 price in tamilnadu

வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் மிகவும் ஸ்டைலிஷான ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் விலை வெளியிடப்பட உள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆதரவை பெற்ற ஆர்வி 400 பைக்கில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி விவரம் வெளியாக உள்ளது.

முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில், 156 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் பெற்ற இந்த மாடலில் செயற்கை முறையில் சைலென்சர் ஒலியை எழுப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா மற்றும் ரிவோல்ட் மோட்டார்ஸ் இணையதளத்தில் ரூ.1000 கட்டணமாக செலுத்தி ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக டெல்லி , புனே நகரங்களிலும் சென்னை உட்பட மற்ற முன்னணி மாநகரங்களில் ஆகஸ்ட் மாதம் முன்பதிவு மற்றும் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

பிரத்தியேகமான கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் முழு எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு, டேங்க் போன்ற அமைப்பின் பின்னணியில் பேட்டரி மற்றும் மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. ரிவோல்ட் ஆப் வாயிலாக இந்த பைக்கினை இயக்குவதற்கான முறைகள் மற்றும் சைலென்சர் ஒலி உட்பட பேட்டரி இருப்பு, மைலேஜ் சார்ந்த அம்சம் உள்ளது.

ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி எல்டிஇ ஆதரவு  இ-சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகனத்தினை பற்றி பல்வேறு தகவல்களை பெற , டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் சாட்டிலைட் நேவிகேஷன், பேட்டரி இருப்பு, குறிப்பிட்ட எல்லைக்குள் பைக்கினை இயக்க அனுமதிப்பது, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் நிகழ் நேரத்தில் பைக் தகவல் மற்றும் கோளாறுகளை கண்டறியும் வசதி, வாய்ஸ் கமென்ட் சிஸ்டம், சைலன்சர் செயற்கை முறையில் செயல்படும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி எல்டிஇ ஆதரவு  இ-சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகனத்தினை பற்றி பல்வேறு தகவல்களை பெற , டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் சாட்டிலைட் நேவிகேஷன், பேட்டரி இருப்பு, குறிப்பிட்ட எல்லைக்குள் பைக்கினை இயக்க அனுமதிக்கின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் பவர் மற்றும் டார்க் தொடர்பான விபரங்களை இந்நிறுவனம் குறிப்பிடவில்லை. ஈக்கோ, சிட்டி, மற்றும் ஸ்போர்ட் என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. ஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி ரூ.1 லட்சம் விலைக்குள் ஆர்வி 400 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யபடலாம்.

மேலதிக விபரங்கள் பற்றி ஆர்வி400 பைக் பற்றி அறிந்து கொள்ளலம்.