அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு புதிய ராயல் என்பீஃல்டு புல்லட் 350x விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. விற்பனையில் உள்ள புல்லட் 350 அடிப்படையில் க்ரோம் பாகங்கள் நீக்கப்பட்டு 350ES போன்றே பல்வேறு நிறங்களுடன் சாதாரணமான தோற்றத்துடன் கம்பீரமாக தொடர்ந்து காட்சியளிக்கின்றது.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற என்ஃபீல்ட் நிறுவனத்தின் குறைந்த விலை புல்லட் 350 மாடலை விட குறைந்த விலையில் வரவிருக்கும் புல்லட் X 350 எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை ரூபாய் 1.10 – ரூ. 1.15 லட்சத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள பிரத்தியேக படங்கள் மூலம் ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350X பல்வேறு வண்ணங்களுடன் டேங்க் டிசைனில் ஸ்டாண்டர்டு புல்லட் போன்று கைகளில் வரையப்படுகின்ற கோல்டன் பின் ஸ்டிரிப் இடம்பெறாமல் 350ES போன்ற டேங்கில் ஸ்டிக்கரிங் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. அதே போல் என்ஜின் கருப்பு நிற ஃபினிஷை பெற்றும், சில நிறங்களில் கிராங் கேஸ் மட்டும் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட பெரும்பாலான பாகங்களுக்கு மாற்றறாக பிளாக் நிறம் இணைக்கப்பட்டுள்ளது.
என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை. புல்லட் 350 எக்ஸ் அதிகபட்சமாக 19.8 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 28 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.
புல்லட் 350எக்ஸ் மாடலை தொடர்ந்து புல்லட் 500 அடிப்படையிலும் புல்லட் X விற்பனைக்கு வெளியிடப்படுமா என உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது டீலர்களை வந்தடைந்துள்ள புல்லட் 350 எக்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. என்ஃபீல்டு புல்லட் ES-X 350 என்ற மாடலும் எலக்ட்ரிக் ஸ்டார்டரை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.
முன்பாக அடுத்த தலைமுறை என்ஃபீல்ட் கிளாசிக், தண்டர்பேர்டு மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் போன்ற மாடல்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350x – ரூ.1.12 லட்சம்
ராயல் என்ஃபீல்ட் புல்லட் ES 350x – ரூ.1.21 லட்சம்
Royal enfield Bullet X and Royal Enfield Bullet ES 350 X images