ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 பைக் விலை ரூ. 1.87 லட்சம் ஆகும்.

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500

உலகின் மிக நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஒரே மோட்டார்சைக்கிள் மாடல் என்ற பெருமைக்குரிய புல்லட் வரிசையில் இடம்பெற்றுள்ள ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 மற்றும் புல்லட் 350 ஆகிய மாடல்கள் 1931 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட என்ஃபீல்ட் புல்லட் மாடல், இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது மாதந்திர விற்பனையில் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு வர்த்தகரீதியாக புல்லட் 350 மற்றும் புல்லட் 500 மாடல்கள்  வருமானத்தை பெற்று தரவில்லை, என்றாலும் தொடர்ந்து புல்லட் மாடல் உற்பத்தி செய்யப்பட்டு காலத்துக்கு ஏற்ற மாறுதல்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 1, 2019 முதல் 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஃபீலடு கிளாசிக், தண்டர்பேர்டு, ஹிமாலயன் மாடல்களை தொடர்ந்து 500சிசி புல்லட்டில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு இடம்பெற்றுள்ளது.

27.2bhp பவர் மற்றும் 41.3 Nm டார்க் வெளிப்படுத்தும்  499cc ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புல்லட் 500 மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.  முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடல் வெளியாகியுள்ளதால் சாதரன மாடல் நீக்கப்பட்டுள்ளது. புல்லட் 500 பைக் தொடர்ந்து கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும்.

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 ஏபிஎஸ் பைக் விலை ரூ. 1.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)