ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இரண்டின் அனுபவத்தையும் ஒரு சேர வழங்கவல்ல மோட்டார் சைக்கிள் மாடலாக ராயல் என்ஃபீல்டு டிரையல்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.1.67 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350, மற்றும் ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 500 பைக் விலை ரூ.2.07 லட்சத்தில் கிடைக்கின்றது. க்ரோம் பாகங்களை அதிகமாக கொண்டு வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ்

350சிசி மற்றும் 500சிசி என்ஜின் என இரண்டிலும் கிடைக்க உள்ள டிரையல்ஸ் மாடலில் கிளாசிக் மற்றும் புல்லட்டில் பயன்படுத்த என்ஜின் பொருத்தப்படடுள்ளது.  19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புல்லட் 500 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி எஃப்ஐ என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள புல்லட் மாடலில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு ஏர் பில்டர் , டூல் பாக்ஸ் பேனல்களை பெற்று மிக நேர்த்தியான சில்வர் மற்றும் கரோமியம் பாகங்களாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

டிரையல்ஸ் 350 மாடலில் சிவப்பு நிற அடிச்சட்டமும், டிரையல்ஸ் 500 மாடலில் பச்சை நிற அடிச்சட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேல் எழும்பிய புகைப்போக்கி ஆஃப் ரோடு சாலைகளில் புல்லட்டை இயக்கினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைந்துள்ளது.

சாதாரண மாடலை விட குறைந்த நீளத்தை கொண்ட ஃபென்டர், ஹெட்லைட் கிரில், ஒற்றை இருக்கை, பெற்றதாகவும், முன்புற 19 அங்குல ஸ்போக்கு வீல் உடன் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற 18 அங்குல ஸ்போக்கு வீல் உடன் 240 மிமீ டிஸ்க் பிரேக் உடன் பாதுகாப்பு சார்ந்த  டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக வந்துள்ளது.

நேரடியான போட்டியாளர்கள் இல்லாத மாடலாக ராயல் என்ஃபீல்டு டிரையல்ஸ் இந்தியாவில் வலம் வரவுள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் விலை
Royal Enfield Bullet Trials news in Tamil