பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஸ்பை படம் வெளியானது

Royal Enfield Classic Bs6 Spied

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது பிஎஸ்4 கிளாசிக் 350 அடிப்படையில் பிஎஸ் 6 மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளதை உறுதி செய்யும் வகையில் ஸ்பை படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது விற்பனையில் கிடைக்கின்ற கிளாசிக் 350 பைக்கின் மேம்பட்ட வெர்ஷன் பெட்ரோல் கலனில் என்ஃபீல்டு பேட்ஜ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில மெக்கானிக்கல் மேம்பாடுகள் வழங்கப்பட்டு ஃபைனல் டிரைவ் இடம் மாற்றப்பட்டு , அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. மேலும் பைக்கின் இருக்கை அமைப்பில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பிஎஸ்4 ஆதரவு 346 சிசி என்ஜினில், மாற்றம் செய்யப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமாக மாற்றப்பட உள்ளது. எனினும், பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியாகவில்லை.  இருந்த போதும்  19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்லதாகவும், 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது விற்பனையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலை விட ரூ.10,000 வரை விலை உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும், முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

Royal Enfield Classic Bs6 Spied 1 Royal Enfield Classic Bs6 Spied Launch Price Dealer 9image source – rushlane.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *