ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கிளாசிக் 500 மாடலின் இறுதி கருப்பு நிற பதிப்பை வெளியிடப்பட்டுள்ளது. 500 சிசி யூசிஇ என்ஜினை பெற்ற மாடல்களை பிஎஸ்4 வெர்ஷனுடன் கைவிடுகின்றது. இந்நிலையில், இறுதியாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களின் முன்பதிவுக்கு ஏற்ப விற்பனை செய்ய உள்ளது.
விற்பனையில் கிடைத்து வருகின்ற பிஎஸ்4 மாசு உமிழ்வுக்கு ஏற்ற 500 சிசி, லாங்-ஸ்ட்ரோக், ஒற்றை சிலிண்டர் UCE என்ஜின் உற்பத்தி நிறுத்திக் கொள்ள உள்ளது. மேலும், இந்த பைக்கில் டூயல் மேட் மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் ஒரு பிரத்தியேக சீரியல் எண் வழங்கப்பட உள்ளது.
2008 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிடப்பட்ட கிளாசிக் 500 இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான தரத்தில் 500சிசி என்ஜினை மேம்படுத்தும் திட்டத்தை கைவிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 500சிசி என்ஜின் நீக்கப்படுகின்றது. சர்வதேச அளவில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இந்த பைக்கின் உதிரிபாகங்கள் தொடர்ந்து கிடைக்கும்.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 350 சிசி மற்றும் 650 சிசி பெற்ற இன்டர்செப்டார் , கான்டினென்டினல் ஜிடி மாடல்கள் பிஎஸ் 6 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரத்தியேக இறுதி பிளாக் பதிப்பு பிப்ரவரி 10 ஆம் தேதி 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஃபிளாஷ் முறை விற்பனையில் அறிமுகப்படுத்தப்படும். விலை விபரம் அன்றைக்கு அறிவிக்கப்பட உள்ளது. தற்போது அதிகாரப்பூர்வ ராயல் என்ஃபீல்ட் இணையதளத்தில் பைக்கை பதிவு செய்துக் கொள்ளலாம்.