Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 சிக்னல்ஸ் பதிப்பு இந்தியாவில் வெளியானது

by automobiletamilan
September 3, 2018
in பைக் செய்திகள்

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் சீரிஸ் வகை மோட்டார் சைக்கிள்களில் வரிசையில், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 சிக்னல்ஸ் பதிப்பு இந்தியாவில் ரூ. 1.62 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை, புனேயில்) விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 சிக்னல்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளதை, இந்திய ஆயுதப்படைகளின் மோட்டார் சைக்கிள் துறையுடன் இணைந்து குறிப்பாக இந்திய இராணுவப் படைகளின் சிக்னல்கள் துறையுடன் இணைந்து கொண்டாடி வருகிறது.

பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு எடிசன் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மாத காலத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங்கள் தற்போது டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளது. சிக்னல்ஸ் எடிசன்களில் பிரிமியம் மோட்டார் சைக்கிள்கள், ஸ்டாண்டர்ட் மாடல்களின் விலையை விட தோராயமாக 15,000 ரூபாய் அதிகமாக இருக்கும்.

இந்த மோட்டார் சைக்கிளின் காஸ்மெட்டிக் மாற்றங்களை பொறுத்தவரையில், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 சிக்னல்ஸ்கள் குரோம் பிட்ஸ்-களை கொண்டுள்ளது. இதில் ஹெட்லேம் பெசல்களில், இன்ஜின், கிரான்ங்கேஸ் கவர், எக்ஸ்ஹாஸ்ட் மட்புளோர், ஸ்போக்டு வீல்கள் மற்றும் ஹான்டில்பார்களை உள்டக்கியதாக இருக்கும்.

சிங்கிள் சீட் வெர்சனில் கிடைக்கும் இந்த மோட்டார் சைக்கிள்கள், பிரவுண் நிறத்தின் டார்க் ஷேடு மற்றும் இரண்டு கலர் ஆப்சன்களுடன் கிடைக்கிறது. கூடுதலாக மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது தனித்துவமிக்க ஸ்டென்ஸ்கோல் நம்பர்கள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு லிமிடெட் எடிசன் மாடல்களிலும், இந்த நம்பரிங்க்-களுக்கு பக்கத்திலேயே கிராப்ஸ் எம்ப்ளம் வரையப்பட்டுள்ளது.

மெக்கனிக்கல் அம்சங்களை பொறுத்த வரையில், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 சிக்னல்ஸ் பதிப்பு, 346cc சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, 19bhp ஆற்றல் 5250rpm டார்க்யூவிலும் மற்றும் உச்சபட்ச டார்க்கியூவில் 28Nm-ஆகவும், 4000rpm-கொண்டதாகவும் இருக்கும். இந்த இன்ஜின் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

சஸ்பென்ஷன்-ஐ பொறுத்தவரை, 35mm டெலஸ்கோபிக் பிராண்ட் போரக்ஸ் மற்றும் கியாஸ் சார்ஜ்டு டுவின் ஷாக் அப்சார்பர்கள் மோட்டார் சைக்கிளின் ரியர் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பிரேக்கை பொறுத்தவரை, முன்புற, பின்புற டயர்களில் சிங்கிள் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த மோட்டார் சைக்கிள்கள் ABS-கள் பொருத்தப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்களில் ABS பொருத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஏர்பார்ன் ப்ளு மற்றும் ஸ்ட்ரோம் ரைடர் சாண்ட் என இரண்டு கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

Tags: LaunchedRoyal Enfield Classic Signals 350 Editionஇந்தியாவில்ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ்வெளியானது
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version