உலகின் மிக நீண்ட பாரம்பரிய கொண்ட ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் கஃபே ரேசர் ரக கான்டினென்ட்டல் ஜிடி 535 மாடலை இந்தியாவை தொடர்ந்து சர்வதேச சந்தையிலிருந்து விரைவில் நீக்க உள்ளது.

என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிரிமியம் ரக மாடலாக விளங்கி வரும் கான்டினென்ட்டல் ஜிடி 535 மாடலுக்கு வரவேற்பு குறைந்து வந்த சூழ்நிலையில் ஜிடி 535 மாடல் முதற்கட்டமாக சில மாதங்களுக்கு முன்னதாக இந்தியாவில் நீக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது.

இந்த மாடலில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் கூடிய 535 சிசி அதிகபட்சமாக 29.1 bhp பவர் மற்றும் 44Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு 650 சிசி எஞ்சின் பெற்ற கான்டினென்ட்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளதால், வரும் செப்டம்பர் 2018 மாத இறுதியில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.