Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 விற்பனைக்கு வெளியானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 14,November 2018
Share
3 Min Read
SHARE

,ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய கான்டினென்டினல் ஜிடி மாடலை அடிப்படையாக கொண்ட 650 சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கினை ரூ.2.65 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

535சிசி எஞ்சின் பெற்ற கான்டினென்டல் ஜிடி கஃபே ரேஸர் மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 650 ட்வீன்ஸ் எஞ்சின் பெற்ற மாடல் நவம்பர் மத்தியில் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதால் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

டிசைன்

இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மாடலின் அடிப்பையிலே வட்ட வடிவ முகப்பு விளக்குடன் மிக நேர்த்தியான பெட்ரோல் டேங்க் அமைப்புடன் ஒற்றை மற்றும் இரட்டை இருக்கை வசதியுடன் கிடைக்க உள்ளது.

 

650 டுவீன்ஸ் எஞ்சின்

இ.ஐ.சி.எம்.ஏ அரங்கில் வெளியிடப்பட்ட கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 என இரண்டிலும் புத்தம் புதிய 648 சிசி திறன் பெற்ற எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

More Auto News

2017 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 விற்பனைக்கு அறிமுகம்
புதிய ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு
ஜனவரியில் புதிய யமஹா FZ V3 பைக் அறிமுகம்
மார்ச் 29.., ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்
டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகை விபரம்

1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

வகை 648 cc, SOHC, air-cooled, parallel-twin
பவர் 47 bhp at 7,100 rpm
டார்க் 52 Nm at 4,000 rpm
Bore x Stroke 78 mm x 67.8 mm
Compression Ratio 9.5:1
கியர்பாக்ஸ் 6 வேக மேனுவல்
எரிபொருள் வகை ப்யூவல் இன்ஜெக்‌ஷன்
இக்னிஷன் டிஜிட்டல் ஸ்பார்க் இக்னிஷன் – TCI

நுட்ப விபரம்

என்ஜினை தொடர்ந்து கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் உள்ள மற்ற வசதிகளை காணலாம், முன்புறத்தில் 110 மிமீ பயணிக்கும் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று 320 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 88 மிமீ பயணிக்கும் ட்வீன் கேஸ் சார்ஜ்டு காயில் ஸ்பிரிங் சுற்றப்பட்ட ஷாக் அப்சார்பரினை பெற்று 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.

முன்jபுறத்தில் டயர் 100/90-18 மற்றும் பின்புறத்தில் டயர் 130/70-18 சக்கரங்களில் 18 அங்குல ஸ்போக் வீலுடன், இரட்டை பிரிவுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் டேக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவினை வழங்கும் காட்டும் கருவி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

எரிபொருள் இல்லாமல் 198 கிலோ கிராம் எடை கொண்டுள்ள கான்டினென்டல் ஜிடி 650 மாடலில் 12.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. 804 மீமீ இருக்கை உயரம் பெற்றுள்ளதால் சற்று உயரம் குறைவானவர்களும் மோட்டார்சைக்கிளை கையாளுவதற்கு எளிமையாக அமைந்திருக்கும்.

ரெட்ரோ க்ரூஸர் பைக் மாடலாக விளங்கும் கான்டினென்டல் ஜிடி 650 நுட்ப விபர பட்டியலை கீழே காணலாம்.

நுட்ப விபரம் கான்டினென்டல் ஜிடி 650
முன்புற சஸ்பென்சன் 41 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்புற சஸ்பென்சன் ட்வீன் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்
முன்புற பிரேக் 320 mm டிஸ்க் உடன் ஏபிஎஸ்
பின்புற பிரேக் 240 mm டிஸ்க் உடன் ஏபிஎஸ்
எடை 198 Kg, (எரிபொருள் இல்லாமல்)
எடை தாங்கும் திறன் 200 Kg
எரிபொருள் கலன் 12.5 லிட்டர்
நீலம் 2122 mm
அகலம்
1165 mm
உயரம்
790 mm
கிரவுன்ட் கிளியரன்ஸ் 174 mm
இருக்கை உயரம் 804 mm

 

விலை விபரம்

சர்வதேச அளவில் 600சிசி முதல் 750சிசி வரையிலான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலை விட மிகவும் சவாலான விலையில் பாரம்பரியத்தை தொடர்ந்து பெற்ற மாடலாக ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக் ரூ.2.65 லட்சம் விற்பனையக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கஸ்டம் கான்டினென்டல் ஜிடி 650 – ரூ. 2.57 லட்சம்

க்ரோம் கான்டினென்டல் ஜிடி 650 – ரூ. 2.85 லட்சம்

(இந்திய எக்ஸ்ஷோரூம் விலை)

bajaj pulsar n125 tank logo
புதிய பஜாஜ் பல்சர் N125 பைக் அறிமுகமானது
யமஹா ரேஇசட்ஆர் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி ஹைபிரிட் விற்பனைக்கு வந்தது
அல்ட்ராவைலட் F77 ஸ்பேஸ் எடிசன் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்
320 கிமீ ரேஞ்சுடன் ஓலா S1 Pro ஸ்போர்ட் ADAS வசதியுடன் அறிமுகமானது
பிஎஸ்6 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 விற்பனைக்கு வெளியானது
TAGGED:Continental GT 650Royal Enfield Continental GT 650
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2024 Pulsar N150
Bajaj
2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved