Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஐரோப்பாவில் ராயல் என்ஃபீல்டு 650சிசி லிமிடெட் எடிஷன் அறிமுகம்

by automobiletamilan
February 22, 2023
in பைக் செய்திகள்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ‘தண்டர் எடிஷன்’ கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் ‘லைட்னிங் எடிஷன்’ இன்டர்செப்டர் 650 என இரண்டு சிறப்பு எடிசன் மாடல்களை விற்பனைக்கு ஐரோப்பாவில் கொண்டு வந்துள்ளது.

இரண்டு பைக்குகளிலும் பொதுவான 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

Lightning Edition Interceptor 650 & Thunder Edition Continental 650

லைட்னிங் எடிஷன் இன்டர்செப்டார் 650 பைக்கில் நீக்கக்கூடிய வகூயிலான மென்மையான பேனிர், டூரிங் இருக்கை, அலுமினிய என்ஜின் கார்டு மற்றும்  சம்ப் கார்டு, உயரமான ஃப்ளை ஸ்கிரீன், டூரிங் மிரர்கள் மற்றும் CNC ஆயில் ஃபில்லர் கேப் ஆகியவற்றை பெறுகிறது.

தண்டர் எடிஷன் கான்டினென்டல் 650 பைக்கில் பேனிர், டூரிங் இருக்கை, பாதுகாப்பு பாகங்கள், ஆயில் ஃபில்லர் கேப் மற்றும் குறுகிய ஃபிளை ஸ்கிரீன் மற்றும் பார் எண்ட் மிரர்ஸ் போன்ற பாகங்களை பெற்றுள்ளது.

லைட்னிங் எடிஷன் இன்டர்செப்டார் 650 இன் விலை GBP 6,459 (ரூ. 6.42 லட்சம்) ஆக தொடங்குகிறது, இது நிலையான பைக்கின் ஆரம்ப விலையை விட GBP 420 (ரூ. 41,787) அதிகம். இதேபோல், GT 650 ஆனது GBP 6,659 (ரூ. 6.62 லட்சம்) ஆகும்.

ஆணால் இந்திய சந்தையில் நேரடியாக இரண்டு ஸ்பெஷல் லிமிடெட் எடிசன்களும் விற்பறைக்கு கிடைக்கவில்லை. ஆனால் ராயல் என்ஃபீல்டு 650 பைக்குகளுக்கு வரையறுக்கப்பட்ட எடிஷன் பைக்குகளில் காணக்கூடியவை உட்பட பல துணைக்கருவிகளுடன் கிட் விருப்பம் கிடைக்கின்றது. இதனால் நம் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்பெஷல் எடிசன் வடிவமைத்துக் கொள்ளலாம்.

Tags: Royal Enfield Continental GT 650Royal Enfield Interceptor 650
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version