ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், அடுத்த புதிய 750cc என்ஜின் பிளாட்ஃபாரத்தை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளது. தற்பொழுது 350cc, 411cc, 650cc என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் பெற்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அடுத்து, 450cc அல்லது 500cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற மாடல்களை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், கூடுதலாக புதிய 750cc பிளாட்ஃபாரத்தில் என்ஜினை உருவாக்கவும், இதில் முதல் மாடலாக பாபர் ஸ்டைல் ஷாட்கன் 750 விற்பனைக்கு வரவுள்ளது.
Royal Enfield 750cc Engine
ஆரம்ப கட்ட தயாரிப்பு பணியில் உள்ள புதிய 750சிசி என்ஜின் பெற்ற மாடலில் முதல் பைக் பாபர் ஸ்டைல் பெற்றதை R2G என்ற குறியீடு பெயரில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து உட்பட பல்வேறு சந்தைகளில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இங்கிலாத்தில் உள்ள லீசெஸ்டர் ஆர்இ தொழில்நுட்ப மையத்தில் தயாரிப்பு பணிகள் நடக்கிறது, மேலும் இது பல தசாப்தங்களாக ராயல் என்ஃபீல்டின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிளாக இருக்க வாய்ப்புள்ளது மற்றும் அதன் தயாரிப்பு வரிசைகளில் மேலாக அமர்ந்திருக்கும்.
350, 450, 650 மற்றும் 750 என ஒவ்வொரு என்ஜின் பிரிவிலும் பல தயாரிப்பு மாடல்கள் வெளிவருவதே திட்டம் என கூறுகின்றன. பட்டியலில் முதலாவதாக பாபர் 750 இருந்தாலும், இன்னும் பல மாடல்கள் குறிப்பாக ரோட்ஸ்டெர் ஹண்டர் 750, அட்வென்ச்சர் ஹிமாலயன் 750, கிளாசிக் 750 மற்றும் சூப்பர் மீட்டியோர் 750 ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
750cc என்ஜின் பெற்ற முதல் மாடல் விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய 450cc என்ஜின் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 விற்பனைக்கு வரக்கூடும்.
2025 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.