ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் அடுத்த 650cc என்ஜின் கொண்ட ஷாட்கன் 650 பைக்கின் என்ஜின் மற்றும் பரிமாணங்கள் வெளியாகியுள்ளது.
ஷாட்கன் 650 பைக்கில் முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற கான்டினென்டினல் 650, இன்டர்செப்டார் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 ஆகிய மாடல்களில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
Royal Enfield Shotgun 650 specs
விற்பனையில் உள்ள சூப்பர் மீட்டியோர் 650 உடன் ஒப்பிடும்போது, ஷாட்கன் 650 பைக் 2170 மிமீ நீளத்தில் (சூப்பர் மீட்டியோர் 2260 மிமீ நீளம்) மற்றும் 820 மிமீ அகலத்தில் சற்று மெலிதாக (சூப்பர் மீட்டியோர் 890 மிமீ ) உள்ளது.
மீட்டியோர் 650 மாடல் 1500 மிமீ உடன் ஒப்பிடும்போது, 1465 மிமீ ஆக வீல்பேஸ் கொண்டுள்ளது.
ஷாட்கன் பைக் மாடலில் 648சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 47 Hp பவர் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.