எலக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான ஆர்.ஆர் குளோபல் பிரத்தியேகமான BGauss என்ற பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் வயர்,கேபிள் உட்பட சுவிட்சுகியர் என பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்ற இந்நிறுவனம் குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட ராம் ரத்னா குழுமத்தின் அங்கமாகும். பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் புனேவில் ஆலை துவங்கப்பட்டு நடப்பு FY 2020-2021 நிதி ஆண்டில் 80,000 வாகனங்கள் வரை விற்பனை இலக்கை நிர்ணையித்துள்ளது. முதற்கட்டமாக தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிகாஸ் பிராண்டில் முதலில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மொத்தமாக 5 விதமான வேரியண்டில் வெளியிடப்பட உள்ளது. உச்சபட்ச வேகம் மணிக்கு 85-90 கிமீ வழங்கும் திறன் பெற்ற மாடல் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கும்.
குறைந்த வேகம் மணிக்கு 50 கிமீ பயணிக்கும் திறனுடன் வரவுள்ள மாடல்கள் ரூ.50,000 முதல் ரூ.90,000 வரை அமைந்திருக்கலாம்.
ஆர்.ஆர். குளோபல் இயக்குநரும், பி.ஜி.காஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான ஹேமந்த் கப்ரா கூறுகையில், “நாங்கள் இந்தியா சந்தையைப் புரிந்துகொண்டு வெற்றிகரமாக எங்கள் கேபிள் மற்றும் வயர் மூலம் உலக வரைபடத்தில் இந்தியாவை நிலை நிறுத்தியுள்ளோம். எங்களின் வலுவான ஆர் & டி பல மின் வணிகங்களை நிறுவிய எங்களின் பின்னணி, எலக்ட்ரிக் வாகனப் பிரிவில் சிறப்பாக பூர்த்தி செய்யும். நகர பயணத்திற்கு ஏற்ப BGauss பிராண்டு ஸ்மார்ட் மற்றும் சிறப்பான வாகனத்தை வழங்கும். ” என குறிப்பிட்டுள்ளார்.