Suzuki : சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் டிரம் பிரேக்கில் சி.பி.எஸ் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற 125சிசி ஸ்கூட்டர் மாடலான சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் டிரம் பிரேக் பெற்ற மாடலில் சி.பி.எஸ் இணைக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்ய தகுதி உள்ள மாடலாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் டிஸ்க் பிரேக் வேரியன்டில் சி.பி.எஸ் எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டதை தொடர்ந்து , தற்போது பேஸ் மாடலான டிரம் பிரேக்கில் கம்பைன்டு நிறுத்த அமைப்பு இணைக்கபட்டுள்ளது.

125சிசி பிரிவில் மிக நீளமான இருக்கை அமைப்பினை பெற்ற ஸுகூட்டராக விளங்கும் ஆக்செஸ் 125 விளங்கும். இதன் 1870மிமீ , அகலம் 655மிமீ மற்றும் உயரம் 1160 மிமீ ஆகும். மேலும் வீல்பேஸ் 1265 மிமீ ஆகும்.

இந்த மாடலில் 8.7 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 124சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 10.2 Nm ஆகும்.

ரூ.690 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ள சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் தொடக்க விலை ரூ. 59,041 (சிபிஎஸ் இல்லாத மாடல்), டிரம் பிரேக் பெற்ற சிபிஎஸ் விலை ரூ. 59,731 மற்றும் டாப் வேரியன்ட் ஆக விளங்கும் டிஸ்க் பிரேக் பெற்ற மாடல் விலை ரூ. 62,700 ஆகும்.

Exit mobile version