இந்திய சந்தையில் பரவலாக எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வெளியாகி வரும் நிலையில் சுஸூகி இந்தியா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் காப்புரிமை கோரிய படங்கள் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்பட்ட சுஸூகி எலக்ட்ரிக் மாடல் கோவிட்-19 பரவலால் அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். குறிப்பாக தற்போது விற்பனையில் ஏத்தர் 450 எக்ஸ், பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப் போன்ற மாடல்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் புதிய ஸ்கூட்டரை உருவாக்க துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காப்புரிமை கோரப்பட்டுள்ள படங்களில் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் போன்றவை இருக்கைக்கு அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை நீக்கும் வகையில் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரின் பவர் மற்றும் ரேஞ்சு சிறப்பாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் சுஸூகி மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியாகுவது உறுதியாகியுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் மின் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு விறபனைக்கு வரக்கூடும்.