ஶ்ரீவாரு மோட்டார்ஸ், பிரனா எலக்ட்ரிக் பைக் விபரம் வெளியானது

srivaru

கோவை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்ட ஶ்ரீவாரு மோட்டார்ஸ் நிறுவனம், தனது முதல் பிரனா எலெக்ட்ரிக் மாடலை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

முன்னாள் டெஸ்லா நிறுவனத்தின் ஊழியராக பணியாற்றிய அனுபவம் பெற்ற மோகன்ராஜ் ராமசாமி 20 ஆண்டுகளுக்கு மேலாக கலிஃபோர்னியாவில் பணியாற்றி உள்ளார். கோவையில் இவர் தொடங்கியுள்ள எஸ்விஎம் பைக்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலை பிரனா என பெயிரிட்டு விற்பனைக்கு கொண்டு வரவுள்ளார்.

பிரணா எலக்ட்ரிக் பைக் 250-300சிசி சந்தையில் உள்ள அனைத்து மாடல்களுக்கும் போட்டியாக அமைவதுடன் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் மாடலாக இருக்கும். இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் மூன்று விதமான வேரியண்டுகளை பெற்றிருக்கும். அவை கிளாஸ், கிராண்ட் மற்றும் எலைட் ஆகும்.

35 Nm டார்க் வழங்க வல்ல இந்த பைக்கில் ரிவர்ஸ் மோட் உட்பட நான்கு விதமான டிரைவிங் மோடுகள் பெற்றிருக்கும். சிங்கிள் சார்ஜில் எலைட் வேரியண்ட் அதிகபட்சமாக 250 கிமீ தொலைவு பயணிக்கவும், கிராண்ட் 126 கிமீ பயணிக்கும் திறனுடனும் விளங்க உள்ளது.

70 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளதால் எஸ்விஎம் பிரனா எலக்ட்ரிக் பைக் விலை மிகவும் சவாலானதாக விளங்கும். வரும் செப்டம்பர் மாதம் தனது பைக்கினை இந்நிறுவனம் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.

உதவி – Autocarpro

Exit mobile version