activa 6g

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் 2019 ஆம் ஆண்டு முதலே சரிவில் பயணித்து வரும் நிலையில், பிப்ரவரி 2020-ல் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களில் முதல் 10 இடங்களை கைப்பற்றிய மாடல்களில் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2,22,961 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அதே காலகட்டத்தில் ஸ்பிளெண்டர் 1,84,502 எண்ணிக்கையிலும், ஹெச்எஃப் டீலக்ஸ் 1,75,997 யூனிட்டுகளும் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் ஆக்டிவா, ஆக்செஸ், கிளாசிக் 350 போன்றவை வளர்ச்சி பாதையில் பயணிக்க துவங்கியுள்ளன. அதே நேரத்தில் ஸ்பிளெண்டர், ஹெச்எஃப் டீலக்ஸ், ஷைன் மற்றும் கிளாமர் போன்றவை இதுவரை மீளாமலே உள்ளது.

பொதுவாக ஸ்கூட்டர் சந்தையில் இரண்டாவது இடத்தை கைப்பற்றி வரும் ஜூபிடர் இம்முறை முதல் 10 இடங்களில் ஒன்றாக இடம்பெற தவறிவிட்டது.

டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – பிப்ரவரி 2020

வ.எண் தயாரிப்பாளர் பிப்ரவரி 2020
1. ஹோண்டா ஆக்டிவா 222,961
2. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 184,502
3. ஹீரோ HF டீலக்ஸ் 175,991
4. டிவிஎஸ் XL சூப்பர் 55,802
5. ஹோண்டா சிபி ஷைன் 50,825
6. சுசூகி ஆக்செஸ் 50,103
7. பஜாஜ் பல்ஸர் 150 49,841
8. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 41,766
9. ஹீரோ கிளாமர் 35,752
10. ஹீரோ பேஸன் 34,797