Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டாப் 5 இரு சக்கர வாகன நிறுவனங்கள் – ஜூன் 2017

by automobiletamilan
July 15, 2017
in பைக் செய்திகள்

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஜூன் 2017 மாதந்திர விற்பனயில் முன்னிலை பெற்ற டாப் 5 நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஹீரோ நிறுவனம் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக உள்ளது.

இரு சக்கர வாகன விற்பனை நிலவரம்

நாட்டின் முதன்மையான மற்றும் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 6,24,185 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தை பெற்றுள்ளது.

இதே காலகட்டத்தில் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ விற்பனையில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஜூன் ஜிஎஸ்டி வருகைக்கு முந்தைய மாதமாக இருந்திருந்தாலும் பஜாஜ் ஆட்டோ ரூ.4000 வரை சலுகைகளை வழங்கியிருந்தாலும், கடந்த வருடம் ஜூன் மாதத்துடன் ஒப்பீடுகையில் 35.89 சதவிகித வீழ்ச்சி பெற்று 1,08,109 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக விளங்கும் ஹோண்டா நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 2.09 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. ஜூன் 2017 முடிவில் 4,16,498 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 10.29 சதவித வளர்ச்சி பெற்று 2,28,518 அலகுகளை விற்பனை செய்துள்ளது. யமஹா நிறுவனம் உள்நாடு மற்றும் நேபால் சந்தை உள்பட மொத்தமாக 69,429 அலகுகளை விற்பனை செய்துள்ளது.

இரு சக்கர வாகன துறையில் ஜூன் மாத நிலவரப்படி 58.59 சதவிகித வளர்ச்சி பெற்று சுசுகி மோட்டார்சைக்கிள் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 25 சதவிகித வளர்ச்சி பெற்று 63,160 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

நிறுவனம் ஜூன் 17 ஜூன் 16 வளர்ச்சி
ஹீரோ  6,24,185 549,533 13.58 %
ஹோண்டா 4,16,498 407,979 2.09 %
டிவிஎஸ் 2,28,518 207,012 10.39 %
பஜாஜ் 1,08,109 168,625 -35.98 %
யமஹா(நேபால்) 69,429 62,478 11 %
ராயல் என்ஃபீல்டு 63,160 50,682 25 %
சுசுகி 33,573 21,170 58.59 %

 

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version