பெங்களூரை மையமாக கொண்ட அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் நிறுவனம், வரும் 2019ம் ஆண்டு இறுதியில் பெட்ரோல் இன்ஜின் பைக்குகளுக்கு போட்டியாக இ-பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பைக்குகளை 200-250cc பிரிவில் அறிமுகம் செய்யபட உள்ளது. இதற்காக சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, கூடுதலாக 6 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளது. இந்த நிதியுதவி பொருட்களை உருவாக்கவும் ஆராய்ச்சி செய்யவும் பயன்படுத்தப்படும்.
ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் 14.78 சதவிகித பங்குகளை டிவிஎஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அல்ட்ராவயலெட் ந ஆட்டோமொபைல் நிறுவனம், இ-பைக்குகளை உருவாக்கி அவற்றை மேம்படுத்த முடிவு செய்தள்ளது. இதுகுறித்து பேசிய இந்த நிறுவனத்தின் உயர்அதிகாரி நாராயண் சுப்ரமணியம், டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த முதலீடு, எங்கள் பொருட்களின் மீது அந்த நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. விரைவில் நாங்கள் எங்கள் மோட்டார் சைக்கிள்களை உருவாக்குவோம்” என்றார்.
நாங்கள் உயர்தரம் கொண்ட செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறோம். எங்கள் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள், புதிய தொழில்நுட்பத்துடனும், புதிய வடிவிலும் வெளியிடப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு ஸ்மார்ட் வசதிகளுடனும் வெளியே வர உள்ளது. இந்த வசதிகளில், அன்-போர்டு டைகோனோஸ்டிக், பிரிவென்டிவ் மெய்டனேன்ஸ், புதிய மேம்பாடுகள், ஒட்டுவ்தற்கு தேவையான வசதிகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.