Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

2024 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V Vs பஜாஜ் பல்சர் NS160 ஒப்பீடு

By MR.Durai
Last updated: 20,December 2023
Share
SHARE

Apache RTR 160 4V vs pulsar NS160

160cc பிரிவில் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V மாடலுடன் பஜாஜ் பல்சர் NS160 பைக்கினை ஒப்பீடு செய்து முக்கிய வித்தியாசங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2024 TVS Apache RTR 160 4V vs Bajaj Pulsar NS160
  • TVS Apache RTR 160 4V vs Bajaj Pulsar NS160 onroad price

160சிசி சந்தையில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலுக்கு போட்டியாக பல்சர் NS160,  எக்ஸ்ட்ரீம் 160R 4V, பல்சர் N160 மற்றும் ஹோண்டா SP160 ஆகியவை விற்பனையில் உள்ள நிலையில் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல்கள் மட்டும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2024 TVS Apache RTR 160 4V vs Bajaj Pulsar NS160

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று 4 வால்வுகளை கொண்ட மாடல்கள் மட்டும் ஒப்பீடு செய்ய எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் 4 வால்வுகளை பெற்ற 159.7cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு 4 வால்வுகளை பெற்ற என்ஜின் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளது.

Sport மோட் மூலம் அதிகபட்சமாக 17.55hp பவரை 9,250 rpm-லும், டார்க் 14.73 Nm ஆனது 7,250 rpm அடுத்து, Urban அல்லது Rain மோட் 15.64 hp பவரை 8,600 rpm-ல், டார்க் 14.14 Nm ஆனது 7,250 rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பல்சர் NS160 பைக்கில் 160.3cc ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் 4 வால்வு பெற்று 9,000 rpm-ல் அதிகபட்சமாக 17.03 bhp பவர் மற்றும் 7,250 rpm-ல் டார்க் 14.6 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலிலும் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Apache RTR 160 4V Bajaj Pulsar NS160
Engine 159.7cc, single-cyl, air-cooled 160.3cc, single cyl, oil-cooled
Power 17.5PS at 9,250rpm 17.2 PS at 9000 rpm
Torque 14.73 Nm at 7,250rpm 14.6 Nm at 7250 rpm
Gearbox 5-speed 5-speed

குறிப்பாக இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியான பவர் வெளிப்படுத்தினாலும் ரைடிங் மோடு பெற்றுள்ள அப்பாச்சி 160 முன்னிலை வகிக்கின்றது.

tvs apache rtr 160 4v

சஸ்பென்ஷன், பிரேக்கிங் மற்றும் பரிமாணங்கள்

பல்சர் என்எஸ்160 பைக்கின் முன்புறத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.  முன்புறத்தில் 100/80-17 டயர் மற்றும் பின்புறத்தில் 130/70-17 டயர் வழங்கப்பட்டுள்ளது.

அப்பாச்சி RTR 160 4V மாடலில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெனஷன் பொருத்தப்பட்டு 270mm பிடெல் டிஸ்க் பிரேக் உடன் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 200 மிமீ டிஸ்க் கொண்ட வேரியண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 90/90-17 49P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் ரேடியல் டயர் பெற்ற 130/70 R17 M/C 62P கொண்டுள்ளது.

யூஎஸ்டி சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் அமைப்பில் பல்சர் என்எஸ்160 முன்னிலை வகிக்கின்றது.

bajaj pulsar ns 160 grey

கிளஸ்ட்டர் வசதிகள்

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் மாடலில், ஹாலெஜென் ஹெட்லைட் உடன் எல்இடி டெயில் லைட் மற்றும் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் ஃப்யூல் லெவல் இண்டிகேட்டர் ஆகியவற்றுடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஆனது ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போன் இணைப்பின் மூலமாக ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதியை பெறுவதன் மூலம் பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை வெளிப்படுத்தலாம்.

அப்பாச்சி 160 எல்இடி ஹெட்லைட், கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளில் முன்னிலையில் உள்ளது.

TVS Apache RTR 160 4v dual channel abs

TVS Apache RTR 160 4V vs Bajaj Pulsar NS160 onroad price

சிறப்பான பெர்ஃபான்ஸ் வெளிப்படுத்துகின்ற 160cc பைக்குகளில் இரண்டு மாடல்களின் ஆன்ரோடு விலை தொகுக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் விலை (எக்ஸ்-ஷோரூம்) ஆன்-ரோடு விலை
TVS Apache RTR 160 4V ₹ 1,34,990 ₹ 1,66,110
Bajaj Pulsar NS160 ₹ 1,36,864 ₹ 1,69,610

2023 bajaj pulsar ns160 tank

எந்த மாடல் வாங்கலாம்

பல்வேறு கனெக்டேட் வசதிகள், ரைடிங் மோடு, எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று அப்பாச்சி RTR 160 4V கொண்டுள்ள நிலையில், பல்சர் என்எஸ் 160 பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க், பிரேக்கிங் மேம்பாடு கொண்டு 4 நிறங்களை பெற்றுள்ளது. ஆனால் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஒற்றை லைட்டிங் ப்ளூ நிறத்தை மட்டும் பெற்றுள்ளது.

apache rtr 160 4v

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Bajaj Pulsar NS160TVS Apache RTR 160 4V
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை
Bajaj
2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ola roadster x electric
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
new Royal Enfield classic 650 bike front
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved