முன்பாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் ஏபிஎஸ் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது அப்பாச்சி ஆர்டிஆர் 160 மாடலில் ஏபிஎஸ் பிரேக் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அப்பாச்சி 160 மாடல்களில் ஏபிஎஸ் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் டிஸ்க் மற்றும் பின்புறமும் டிஸ்க் பிரேக் பெற்ற இரு மாடல்களிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூபாய் 6,250 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 160

ஒரு சிலிண்டர் பெற்று இரண்டு வால்வுகளை பெற்ற 160சிசி என்ஜின் அதிகபட்சமாக  15 HP பவரையும், 13 Nm டார்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையின் அடுத்த மாடலான அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் நான்கு வால்வுகள் இடம்பெற்றுள்ளது.

அப்பாச்சி 160 பைக்கின் முன்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று, மற்றொரு வேரியன்டாக டிரம் பிரேக் ஆப்ஷன் பெற்றதாக கிடைத்து வருகின்றது. இரு மாடல்களிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 விலை பட்டியல்

அப்பாச்சி ஆர்டிஆர் விலை ரூ. 85,479

அப்பாச்சி ஆர்டிஆர் விலை ரூ. 88,114  (டபுள் டிஸ்க்)

(விற்பனையக விலை சென்னை)

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஜிக்ஸர் , ஹோண்டா சிபி ஹார்னெட், எக்ஸ்டீரிம் 200 மற்றும் பல்சர் என்எஸ் 160 மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.