விற்பனையில் உள்ள டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V பைக்கின் அடிப்படையில் வெளியாகியுள்ள ரேசிங் எடிசனின் விலை ரூ.1,28,720 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்பாக கிடைக்கின்ற ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்ட வேரியண்ட்டை விட ரூ.1,500 வரை கூடுதலாக அமைந்துள்ளது.
அப்பாச்சி RTR 160 2V மாடலில் 15.82 bhp பவர், 13.85 Nm டார்க் ஆனது வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் ஆனது வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் ஆகிய மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.
ரேசிங் எடிஷனில், எரிபொருள் டேங்க் மற்றும் டெயில் பகுதியில் சிவப்பு மற்றும் சாம்பல் நிற கோடுகளுடன் கூடிய மேட் பிளாக் நிறத்தை கொண்டுள்ளது. இதனுடன் கார்பன் ஃபைபர் மற்றும் ரேஸ் மாடல்களுக்கான பாடி கிராபிக்ஸ் மற்றும் ரேசிங் எடிஷன் லோகோ உள்ளது. கூடுதலாக, சிவப்பு அலாய் வீல் கொண்டுள்ளது. மற்றபடி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக் கொண்டு ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் வாய்ஸ் அசிஸ்டென்ஸ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், க்ளைடு த்ரூ டெக்னாலஜி (GTT- Glide Through Technology) மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் வழங்குகின்றது.
17 அங்குல அலாய் வீல் உடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஸ்பிரிங் உடன் கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர் உள்ளது.
2024 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 2வி மாடல் ரூ.1,09,990 முதல் ரூ.1,28,720 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆக கிடைக்கின்றது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…