டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 2023 மே மாதம் முடிவில் விற்பனை எண்ணிக்கை 330,609 ஆக பதிவு செய்துள்ளது. மே 2022 யில் பதிவு செய்திருந்த 302,982 எண்ணிக்கையை விட விற்பனை 9% வளர்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு ஃபேம் மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை 17,953 ஆக உள்ளது. மேலும் 30,000க்கு மேற்பட்ட ஐக்யூப் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவை பெற்றுள்ளது. முந்தைய மே 2022-ல் வெறும் 2,637 ஆக மட்டும் பதிவு செய்திருந்தது.
TVS Motor Sales Report – May 2023
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை மே 2022-ல் 287,058 எண்ணிக்கையில் இருந்து மே 2023-ல் 319,295 எண்ணிக்கையை பெற்று 11% வளர்ச்சி பெற்றுள்ளது. உள்நாட்டில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை மே 2023-ல் 32% அதிகரித்து 252,690 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விற்பனை 9% வளர்ச்சியை பெற்று மே 2022-ல் விற்பனையான 148,560 எண்ணிக்கையில் இருந்து மே 2023-ல் 162,248 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 3% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது, மே 2022-ல் விற்பனை 100,665 இருந்து மே 2023-ல் 103,203 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள் மே 2022-ல் 15,924 எண்ணிக்கையாக இருந்த விற்பனை, 7 % வீழ்ச்சி அடைந்து 2023 மே மாதத்தில் 11,314 எண்ணிக்கை பதிவு செய்துள்ளன.
மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை அறிந்து கொள்ளுங்கள்