டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 அட்வென்ச்சர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை.!

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300

டிவிஎஸ் மோட்டாரின் முதல் அட்வென்ச்சர் டூரிங் ரக மாடலாக வரவுள்ள அப்பாச்சி RTX 300 பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த மாடலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட RTX-D4 300சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Apache RTX 300

அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பைக்கில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்சினில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ரைடு-பை-வயர் த்ரோட்டில் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பெறுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியாக ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையிலான டிசைனை கொண்டிருப்பதுடன் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல வீல் பெற்றாலும் அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளதால் குறைவான ஆஃப் ரோடு பயணத்துக்கும் நெடுந்தொலைவு டூரிங் பயணத்துக்கு ஏற்றதாக அமைந்திருக்கலாம். முன்புறத்தில் இரண்டு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் உடன் ரன்னிங் எல்இடி விளக்குகள் உள்ளது.

முன்புறத்தில் கோல்டன் நிறத்திலான அப்சைடு டவுன் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் அமைந்துள்ளது. TFT கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சமீபத்தில் சிஎன்ஜி ஸ்கூட்டரை தவிர வெளியிட உள்ளதாக காட்சிப்படுத்திய நிலையில், அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 அட்வென்ச்சர் விற்பனைக்கு ரூ. 2.20 லட்சத்திற்குள் விற்பனைக்கு அனேகமாக அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 BIKE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *