Bike News

புதிய ஐக்யூப் எலக்ட்ரிக் வருகை விபரம் வெளியானது

TVS iQube st Electric Scooter

ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் புதிய வேரியண்ட் மற்றும் ICE இருசக்கர வாகனம், உட்பட முதல் மூன்று சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ஆகியவற்றை நடப்பு நிதியாண்டில் வெளியிட டிவிஎஸ் மோட்டார் திட்டமிட்டுள்ளது

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் ஒரு பட்ஜெட் விலை மாடலை தொடர்ந்து அறிமுகம் செய்ய தாமதப்படுத்தி வருகின்றது. அந்த மாடல் தற்பொழுது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ப்ரீமியம் ஐக்யூப் எஸ்டி வேரியண்ட் தற்பொழுது வரை வெளியிடப்படவில்லை.இந்த மாடலும் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஐக்யூப் மாடல் ஆனது தற்பொழுது 1.37 லட்சம் ரூபாய் விலையில் துவங்கும் நிலையில் இந்த மாடலை விட குறைவான விலையில் போட்டியாளர்களில் பல்வேறு மாடல்கள் கிடைக்க தொடங்கியுள்ளது.

போட்டியாளர்களுடன் ஈடு கொடுக்கவும் தனது சந்தை மதிப்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் புதிய மாடல் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறைவான மாடலாக இருக்கும் என்பதனால் ரேன்ஜ் ஆனது தற்பொழுது உள்ள 100 கிலோ மீட்டர் என்பதை விட சற்று குறைவானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையான தொழில்நுட்ப விபரங்கள் தற்பொழுது எதுவும் வெளியாகவில்லை. அடுத்த சில வாரங்களில் இந்த மாடலுக்கான முக்கிய விபரங்கள் வெளியிடப்படலாம்.

கடந்தாண்டு வெளியிட்ட டிவிஎஸ் எக்ஸ் மாடலின் டெலிவரியை விரைவில் துவங்கவும் திட்டமிட்டு இருக்கின்றது. மேலும் இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் 3 சக்கர ஆட்டோ மாடலும் இந்த ஆண்டு விற்பனைக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாமல் பெட்ரோல் வாகனங்களிலும் கவனம் செலுத்த உள்ள நிறுவனம் புதிய மாடல்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது எனவே நடப்பு நிதி ஆண்டில் பல்வேறு புதிய மாடல்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இதில் ஐக்யூப் மாடல் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Share
Published by
MR.Durai