Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது.?

உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டராக வந்துள்ள ஜூபிடர் விற்பனைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

By MR.Durai
Last updated: 28,January 2025
Share
SHARE
Highlights
  • ரூ.85,000 விலையில் ஜூபிடர் சிஎன்ஜி விற்பனைக்கு வரக்கூடும்.
  • 1.4Kg சிஎன்ஜி எரிபொருளை நிரப்பும் டேங்க் வசதி உள்ளது.
  • பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணைந்து 226 கிமீ பயணிக்கலாம்.

tvs jupiter cng

உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் மாடலாக அறியப்படுகின்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூபிடர் 125 சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் ரூ.85,000 விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் இணைந்து சுமார் 226 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய சந்தையில் உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் பஜாஜ் ஆட்டோவின் ஃப்ரீடம் 125 விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் ஒட்டுமொத்தமாக 330 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

TVS Jupiter 125 CNG

டிவிஎஸ் மோட்டாரின் பிரசத்தி பெற்ற 125சிசி ஜூபிடர் ஸ்கூட்டர் 33 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்ட பகுதியில் தற்பொழுது சிஎன்ஜி எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டு 1.4 கிலோ கிராம் சிஎன்ஜி எரிபொருளை நிரப்பும் வகையிலான 9.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் உள்ளது. எனவே, பூட் ஸ்பேஸ் முழுமையாக இழந்துள்ளது.

பெட்ரோல் மாடலை விட 0.9 hp பவர் , 0.9Nm வரை டார்க் குறைந்து தற்பொழுது 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் சிஎன்ஜி முறைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு 6,000rpm-ல் 7.2hp பவர் மற்றும் 5,500rpm-ல் 9.4Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் தொடர்ந்து சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பொழுது அதிகபட்ச வேகம் மணிக்கு 80.5 கிமீ ஆகவும், ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 84 கிமீ மைலேஜ் தரும் என உறுதிப்படுத்தப்பட்டு, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இணைந்து ஒட்டுமொத்தமாக 226 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் மோட்டார் குறிப்பிடுகின்றது.

tvs jupiter cng scooter cng filling

தோற்ற அமைப்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையில் உள்ள பெட்ரோல் ஜூபிடர் 125சிசி போலவே அமைந்துள்ளது. வழக்கமான டிஜி அனலாக முறையிலான கிளஸ்ட்டர் பக்கவாட்டிலும், முன்புறத்திலும் சிஎன்ஜி பேட்ஜ் மட்டும் பெற்று பேனல்கள் என அனைத்திலும் விற்பனையில் உள்ள மாடலை போலவே அமைந்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி எப்பொழுது விற்பனைக்கு வெளியிடப்படும் என உறுதிப்படுத்தப்படாத நிலையில், மூன்று முதல் 6 மாதங்களுக்குள் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:TVS JupiterTVS Jupiter CNG
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
honda activa white colour
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ஜிக்ஸர் SF 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved