Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது

by automobiletamilan
September 12, 2019
in பைக் செய்திகள்

tvs jupiter grande

ப்ளூடூத் ஆதரவு பெற்ற டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் கிளஸ்ட்டருடன் ஜூபிடர் கிராண்டே விற்பனைக்கு ரூ. 66,786 விலையில் (தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம்) விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முந்தைய கிராண்டே மாடலை விட ரூ.252 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் கிடைத்து வருகின்ற ஜூபிடர் ZX டிஸ்க் பிரேக் டாப் வேரியண்டை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஜூபிடர் கிராண்டே எடிஷனில் 110 சிசி எஞ்சின் பொருந்த்தப்பட்டு 7.9 பிஹெச்பி ஆற்றலை 7500 rpm சுழற்சியிலும் 8.4 Nm டார்க்கினை வழங்க 5500 rpm எடுத்துக்கொள்ளுகின்றது. டிவிஎஸ் நிறுவனத்தால் காப்புரிமை பெற்ற எக்னோமீட்டர் நுட்பத்தை பெற்றுள்ளதால் ஈகோ மோட் மற்றும் பவர் மோட் இரு பிரிவுகள் கொண்ட மோடினை பெற்றுள்ளது.

3டி முறையில் கிராண்டே லோகோ, டைமன்ட் கட் அலாய் வீல், பிரீமியம் மரூன் கலர் இருக்கை, க்ரோம் பூச்சூ பெற்ற எல்இடி டெக் முகப்பு விளக்கு, பார்ஷியல் க்ரோம் ஃபினிஷ் பெற்ற ரியர் வியூ மிரர் போன்றவற்றுடன் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் ப்ளூடுதல் ஆதரவை பெற்றுள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆப் கொண்டு ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளலாம்.

tvs jupiter grande cluster

இதன் மூலம் ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு குறுஞ்செய்தி, அழைப்புகள் போன்ற அறிவிப்புகள், ஓவர் ஸ்பீடு அலெர்ட், டீரிப் மீட்டர், மற்றும் அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வதுடன் ஹெல்மெட் ரிமைன்டரை கொண்டுள்ளது.  என்டார்க் 125 ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளதை போன்று அல்லாமல் டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டரில், சர்வீஸ் ரிமைன்டர், எரிபொருள் இன்டிகேட்டர் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விலை

TVS Jupiter SBT- ₹ 58,126

TVS Jupiter ZX SBT – ₹ 62,509

TVS Jupiter ZX Disc SBT -₹ 65,076

TVS Jupiter Classic Edition SBT – ₹ 65,306

TVS Jupiter Grande Disc – ₹ 66,786

Tags: TVS Jupitertvs jupiter Grandeடிவிஎஸ் ஜூபிடர்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version