Automobile Tamilan

டிவிஎஸ் சிஎன்ஜி பைக் அறிமுகம் எப்பொழுது..?

பஜாஜ் ஆட்டோவை தொடர்ந்து சிஎன்ஜி பைக் மீதான கவனத்தை செலுத்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் துவங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் டிவிஎஸ் மோட்டார் புதிய எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் ICE பைக், கூடுதலாக எலக்ட்ரிக் 3 வீலர் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றது. ஏற்கனவே ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலான சில வேரியண்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்தது.

சமீபத்தில் பஜாஜ் வெளியிட்ட ஃபிரீடம் 125 பைக் ஆனது எரிபொருள் செலவு 50% வரை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளதால் பல்வேறு வாடிக்கையாளர்கள் இதன் மீதான ஆர்வத்தை திருப்புவார்கள் என்பதால் இதற்கு போட்டியாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிளை சந்தைக்கான மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்கியுள்ளதாக தெரிகின்றது. டிவிஎஸ் மோட்டாரின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் அனைத்து விதமான நுட்பங்களிலும் (சிஎன்ஜி, EV, multi-fuels, மேலும் பல..,) நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என தெரிவித்து இருக்கின்றார்.

TVS Raider 125 flex-fuel

ஏற்கனவே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்று நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. கூடுதலாக ஒரு எலக்ட்ரிக் டூவீலர் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படும் என இந்நிறுவனம் குறிப்பிட்டு இருக்கின்றது. மேலும் இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மூன்று சக்கர ஆட்டோரிக்‌ஷா மாடலும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் அப்பாச்சி பைக்கில் ஸ்பெஷல்
எடிஷனாக பிளாக் எடிசன் மற்றும் ரேஸ் எடிசன் போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது.

மேலும் படிக்க – டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் சிறப்புகள்

source

Exit mobile version