Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

12 ஆண்டுகால காப்புரிமை வழக்கு.. முடிவுக்கு வந்த பஜாஜ் டிவிஎஸ் ட்வீன் ஸ்பார்க் நுட்பம்

by automobiletamilan
November 2, 2019
in பைக் செய்திகள்

tvs radeon

கடந்த 2007 ஆம் ஆண்டு தொடரப்பட்ட பஜாஜ் நிறுவனத்தின் DTS-i (Digital Twin Spark Ignition) நுட்பத்தை காப்புரிமை மீறி பயன்படுத்தியதாக டிவிஎஸ் மீது வழக்கு தொடரந்தது. ஆனால், டிவிஎஸ் நிறுவனத்தின் CC-VTi எனப்படும் Controlled Combustion Variable Timing Intelligent நுட்பத்தையே பயன்படுத்தி பஜாஜ் அதனை தயாரித்ததாக வழக்கை டிவிஎஸ் நிறுவனம் தொடர்ந்தது.

இந்த வழக்கு 2007 ஆம் ஆண்டு முதல் டிவிஎஸ் மீது காப்புரிமை மீறல் வழக்கை பஜாஜ் ஆட்டோ தாக்கல் செய்தது. இந்நிறுவனம் தனது காப்புரிமை பெற்ற DTS-i தொழில்நுட்பத்தை நகலெடுத்ததாக குற்றம் சாட்டியது. டிவிஎஸ் தனது 125 சிசி ஃபிளேம் மோட்டார் சைக்கிளுக்கு டிடிசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக பஜாஜ் குறிப்பிட்டிருந்தது. பஜாஜ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி டிவிஎஸ். 250 கோடி ரூபாய் மதிப்பு என கூறி பஜாஜ் மீது டிவிஎஸ் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தது.

இவ்வாறு ஒவ்வொரு நிறுவனமும் மற்ற நிறுவனங்கள் மீதான வழக்கு பம்பாய் உயர் நீதிமன்றம், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியம் (ஐபிஏபி) ஆகியவற்றில் நிலுவையில் இருந்தது. சில வழக்குகள் சர்வதேச அளவிலும் தாக்கல் செய்யப்பட்டு இலங்கை மற்றும் மெக்ஸிகோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இரு நிறுவனங்களும் நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடித்து கொண்டதாகவும், ஒருவருக்கொருவர் எந்தவிதமான இழப்பீடு அல்லது அபராதத் தொகை எதுவும் செலுத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

2019 Bajaj Ct 110

ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரும் பிஎஸ்6 விதிமுறைகளால் இரு நிறுவனங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். பிஎஸ்6 அமலாக்கத்திற்குப் பிறகு டி.டி.எஸ்.சி தொழில்நுட்பம் வழக்கற்றுப் போகக்கூடும் என்பதால், உரிமைகள் தொடர்பாகப் போராடுவதால் எந்தப் பயனும் இல்லை என முடிவுக்கு வந்திருக்கலாம்.

Tags: TVSபஜாஜ் ஆட்டோ
Previous Post

விரைவில்.., பிஎஸ்6 ஹோண்டா ஷைன் விற்பனைக்கு அறிமுகமாகிறது

Next Post

பல்சர் 150 நியான் பைக்கின் மேம்பட்ட மாடலை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ

Next Post

பல்சர் 150 நியான் பைக்கின் மேம்பட்ட மாடலை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version