வரும் செப்டம்பர் 4ஆம் தேதி டிவிஎஸ் மோட்டாரின் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலாக வரவுள்ள என்டார்க் 150 அல்லது என்டார்க் 160 என இரண்டில் ஒன்றை வெளியிட உள்ளது. அனேகமாக லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
என்டார்க் 125சிசி சந்தையில் சிறப்பான வரவேற்பினை கொண்டுள்ள நிலையில், கூடுதலாக வரவுள்ள என்டார்க் 150 மிக சிறப்பான எல்இடி புராஜெக்டர் விளக்குடன் மிக நேர்த்தியான T வடிவ ரன்னிங் விளக்கினை பெறக்கூடும்.
டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று ஸ்டார்ட்கனெக்ட் எக்ஸ் வசதியுடன் மிக சிறப்பான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துலாம், ஆனால் தற்பொழுது வரை எஞ்சின் தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
சமீபத்தில் இந்நிறுவனம் ஆர்பிட்டர் மின்சார ஸ்கூட்டரை வெளியிட்டிருந்த நிலையில், செப்டம்பர் 4ல் என்டார்க் 150 மற்றும் கூடுதலாக செப்டம்பர் இறுதியில் அட்வென்ச்சர் RTX 300 என்ற மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.