Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

by ராஜா
6 September 2025, 11:02 am
in Bike News
0
ShareTweetSend

tvs ntorq 150 scooter review

பட்ஜெட் விலை, 150cc ஸ்கூட்டர், சக்தி வாய்ந்த என்ஜின் மாறுபட்ட டிசைன் நவீன வசதிகள் என பலவற்றை கொண்டுள்ள டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 ஸ்கூட்டருக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் பிரீமியம் வசதிகள் கொண்ட போட்டியாளர்களாக ஏப்ரிலியா எஸ்ஆர் 175, லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற சக்திவாய்ந்த மாடல்கள் யமஹா ஏரோக்ஸ் 155, மற்றும் ஹீரோ ஜூம் 160 ஆகியவை உள்ளது.

என்டார்க் 125யின் வெற்றி மிகப்பெரிய பலமாக என்டார்க் 150க்கு இருக்க போகின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, குறிப்பாக சொல்லனும்னா மாதந்தோறும் 20,000 கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் இந்த என்டார்க்125 இளைய தலைமுறையினருக்கான மிக வலுவான ஸ்போர்ட்டிவ் லூக் மற்றும் பெர்ஃபாமென்ஸ் சார்ந்தவற்றை பெற்றிருப்பது மிகப்பெரிய பலமாகும்.

Ntorq 150 பட்ஜெட் விலையின் பின்னணி.!

பெரும்பாலான அடிப்படை உதிரிபாகங்களான சேஸிஸ், சஸ்பென்ஷன் அமைப்பு என பலவற்றுடன் 12 அங்குல வீல் மாறுபட்ட டிசைன் நிறத்துக்கு ஏற்ற வண்ணம், பிரேக்கிங் அமைப்பில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றாலும் அனைத்தும் என்டார்க் 125 மாடலினை அடிப்படையாக கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் என்ஜின் 149.7cc 3 வால்வு கொண்டுள்ள நிலையில், இதற்கான அடிப்படையான வடிவமைப்பும் என்டார்க் 125 என்ஜினில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால்  எக்ஸ்ஹாஸ்ட் அமைப்பில் மாறுதல்கள் உள்ளது.

இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டாண்டர்டு ஹைபிரிட் TFT/LCD கிளஸ்ட்டர் ஆனது என்டார்க் 125 மற்றும் ஜூபிடர் 125 போன்றவற்றில் இருந்து பெற்றும், டாப் வேரியண்டில் உள்ள TFT கிளஸ்ட்டர் ஆனது RR310 பைக்கிலிருந்தும் பெற்றுள்ளது.

இவ்வாறு பல பாகங்களை பகிர்ந்து கொண்டாலும் வடிவமைப்பிலும் செயல்திறனிலும் மாறுபட்டதாக அமைந்திருப்பது என்டார்க் 150க்கு மிகப்பெரிய பலமாகும். எனவே, ரூ.1.19 லட்சம் முதல் ரூ.1.29 லட்சம் வரை உள்ளது.

TVS Ntorq 150 scooter tft cluster

போட்டியாளர்கள் யார்?

ரூ.1.26 லட்சத்தில் உள்ள ஏப்ரிலியா எஸ் 175 மாடல் 175cc  ஏர்கூல்டு என்ஜின் பெற்றாலும் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் பெரிய வித்தியாசங்கள் இல்லையென்றாலும் நேரடியான போட்டியாளருக்கு இணையாக இருந்தாலும், 14 அங்குல வீல் பெற்று TFT கிளஸ்ட்டர் எனவும், வலுவான டீலர் நெட்வொர்க் இல்லாத காரணத்தால் பின்னடைவை சந்திக்கின்றது.

ரூ.1.50-ரூ.1.54 லட்சம் வரை கிடைக்கின்ற ஏரோக்ஸ் 155 பற்றி சொல்லவே தேவையில்லை நிரூபிக்கப்பட்ட 155cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெர்ஃபாமென்ஸ் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல், 14 அங்குல  என பலவற்றை கொண்டு  பிரீமியம் வகையில் உள்ளது. ரிமோட் கண்ட்ரோல் வசதி, TFT கிளஸ்ட்டர் ஆகியவற்றை பெற்றுள்ளது. மாதந்தோறும் 2,000 முதல் 3,000 யூனிட்டுகள் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று புதிய ஹீரோ ஜூம் 160 சற்று பெரிய 14 அங்குல வீல் மாறுபட்ட மேக்ஸி ஸ்டைல் டிசைன், அகலமான பேட்டர்ன் டயர் என பலவற்றை பெற்றுள்ள நிலையில் ரூ.1.49 லட்சத்தில் கிடைக்கின்ற இந்த மாடல் தற்பொழுது கிடைக்க துவங்கியுள்ளது.

ஏரோக்ஸ் 155, ஜூம் 160 போன்றவை பவர், பெர்ஃபாமென்ஸ் என பலவற்றில் மிகவும் மேம்பாடாக என்டார்க் 150யை விட வேறுபட்டதாக அமைந்துள்ளது.

tvs ntorq 150 rear view

வெல்லுமா டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர்

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிதாக இந்திய சந்தையில் 150சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டை உருவாக்க துவங்கியுள்ளது. ஸ்போர்ட்டிவ் ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், பட்ஜெட் விலை, மாறுபட்ட வடிவமைப்பு, கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள் என பலவற்றில் கவர்ந்துள்ளது.

60 கிமீ முதல் 80 கிமீ வேகத்தில் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் நிலையில் ஸ்டீரிட், ரேஸ் என இரு ரைடிங் மோடுகள் பெற்று ரேஸ் மோடில் iGo அசிஸ்ட் மூலம் ரேஸ் மோடில் கூடுதலாக 0.7nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

ஆனால், 12 அங்கூல வீலுக்கு பதிலாக 14 அங்குல வீல் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், பின்புற பிரேக்கிங் மேம்பாடு கொடுத்திருக்க வேண்டும்.

இனி தெரிய வரும..? இந்திய ஆட்டோமொபைலின் 125சிசியை கடந்து அடுத்த ஸ்கூட்டர் செக்மென்ட் 150சிசி அல்லது 160சிசி என தெரிய சில மாதங்களாகும்.

TVS Ntorq 150 scooter

Related Motor News

டிவிஎஸ் என்டார்க் 150 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்

டிவிஎஸ் என்டார்க் 150 செப்டம்பர் 1ல் அறிமுகம்

டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

Tags: TVS NTorq 150
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tvs apache 20th year Anniversary edition

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

2025 yamaha r15 v4 bike

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan