125cc பைக் சந்தையில் மிகவும் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடாக உள்ள ஏபிஎஸ் உடன் கூடுதலாக இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு ரூ.93,800 முதல் ரூ.95,800 வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த மாடலின் போட்டியாளர்களான எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் என்எஸ்125, பல்சர் என்125, ஹோண்டா சிபி ஹார்னெட் 125 போன்றவற்றில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றாலும், பின்பக்க டயரில் டிரம் பிரேக் உள்ளது ஆனால் டிவிஎஸ் ரைடரில் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
TVS Raider 125 ABS
iGo வேரியண்டின் அடிப்படையிலான 3 வால்வுகளை பெற்ற 124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு 10 % வரை கூடுதலாக பவர் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள எஞ்சின் அதிகபட்சமாக டார்க் சாதாரண மாடலை விட 0.55Nm வரை கூடுதலான டார்க் 6,000RPM-ல் 11.75 Nm வழங்குகின்றது.
இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள இந்த ரைடர் 125 மாடலில் குறைந்த வேகத்திலும் மற்றும் மேம்பட்ட எரிபொருள் செயல்திறனுக்கான GTT நுட்பத்துடன், 90/90-17 முன்பக்கம் மற்றும் 110/80-17 பின்புறம் என்ற புதிய டயர் கொடுக்கப்பட்டுள்ளதால் மென்மையான சாலைகள் மற்றும் சீரற்ற நிலப்பரப்புகளில் சிறப்பான ரோட் கிரிப் வழங்க உதவுகின்றது.
மெட்டாலிக் சில்வர் ஃபினிஷ் நிறத்துடன் சிவப்பு நிற அலாய் வீல் வழங்கப்பட்டுளது. ஏபிஎஸ் கொண்ட வேரியண்ட் பைக்கில் ஃபாலோ மீ ஹெட்லேம்ப் பெற்று TFT அல்லது எல்சிடி ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
99+ கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் TFT கிளஸ்ட்டர் அல்லது 85+ அம்சங்களுடன் நேர்த்தியான ரிவர்ஸ் LCD என இரண்டு விதமான வகை உள்ளது.
- TVS Raider TFT DD ₹95,600
- TVS Raider SXC DD – ₹ 93,800
(ex-showroom)