டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின், சிறந்த இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக விளங்குகின்ற டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் சில்வர் நிற அலாய் வீலை பெற்று வேறு எவ்விதமான மாற்றங்களும் பெறாமல் ரூ.42,385 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ஸ்போர்ட்
2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் 20 லட்சத்துக்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள நிலையில், தொடக்க நிலையில் சந்தையில் உள்ள ஹீரோ HF டான், பஜாஜ் சிடி 100, பஜாஜ் பிளாட்டினா மற்றும் ஹோண்டா ட்ரீம் சீரீஸ் ஆகிய பைக் மாடல்களுடன் சந்தையை நேரடியாக பகிர்ந்து கொண்டுள்ளது.
மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்ல 100சிசி டியூரா லைஃப் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.5 பிஹெச்பி பவர் மற்றும் 7.4 என்எம் இழுவைத் திறன் வழங்குவதுடன் 4 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட் மைலேஜ் லிட்டருக்கு 95 கிமீ ஆகும்.
இந்நிறுவனத்தின் காப்புரிமை பெறப்பட்ட எக்னோமீட்டர் பொருத்தப்பட்டுள்ள இந்த பைக்கில் ஈக்கோ மற்றும் பவர் என இருவிதமான மோடுகளை பெற்று மிக சிறப்பான வகையில் எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது.இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக் தேர்வினை கொண்டுள்ளது.