Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ. 52,907 விலையில் அறிமுகமாகிறது டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+

by automobiletamilan
September 27, 2018
in பைக் செய்திகள்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய மோட்டார் சைக்கிளான டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ மோட்டார் சைக்கிள்களை டூயல் டோன் நிறத்தில், இந்த விழாக்கால சீசனை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் புதிய கிரே-பிளாக் நிறத்திலும், ஸ்டைலான ரெட்-பிளாக்-ஒயிட் கிராப்பிக்ஸ்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

கூடுதலாக, புதிய டூயல்-டோன் வகை, ஸ்டார் சிட்டி+ மோட்டார் சைக்கிள்கள் பிளாக்-ரெட், பிளாக்-ப்ளூ மற்றும் ரெட்-பிளாக் கலர் ஆப்சன்களிலும், இந்தியாவில் 52 ஆயிரத்து 907 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்)

மெக்கானிக்கலை பொறுத்தவரை, 2018 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ மோட்டார் சைக்கிள்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மோட்டார் சைக்கிள்கள், நிறுவனத்தின் ‘எக்கோடிரஸ்ட்’ 110cc சிங்கிள்-சிலிண்டர், நான்கு ஸ்டிரோக் இன்ஜின்களை கொண்டுள்ளது. இந்த இன்ஜின்கள் மூலம், 8.4 PS ஆற்றலுடனும், 7,000 rpm மற்றும் 8.7Nm டார்க்யூவில் 5,000 rpm-ஆக இருக்கும். டிரான்ஸ்மிஷன் பணிகளை பொறுத்தவரை 4-ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்த மோட்டார் சைக்கிள்களில், ஒருங்கினைக்கப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்ப (Synchronized Braking Technology (SBT)) வசதிகளை கொண்டுள்ளது. பெயரில் இருப்பது போன்றே இந்த பிரேக்கிங் சிஸ்டம்கள் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு பக்கத்திலும் ஒரே நேரத்தில் செயல்படும். இதனால், மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள் சிறந்த பிரேகிங் வசதியை பெறுவதுடன், மோட்டார் சைக்கிள் ஸ்கிட் ஆவது தவிர்க்கப்படும். இதுமட்டுமின்றி இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக் வசதிகளை கொண்டதுடன், 130mm யூனிட் முன்புறத்திலும், 100mm யூனிட்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலோட்டமாக பார்க்கையில், சாதாரண மாடல்களில் ஸ்டைலிங் பிட்ஸ்கள் செய்யப்பட்டிருக்கும். டிவிஎஸ் பிராண்டட் குரோம் 3D லோகோ, கிரவுன் விசிட்டர் மற்றும் ஸ்டைல் பிளாக் கிராப் ரயில், இந்த மோட்டர் சைக்கிள்களில், 17 -இன்ச் 5 ஸ்போக்ஸ் பிளாக் அலாய் வீல்கள் மற்றும் கண்ணாடிகளில் சில்வர் நிறத்தில் இருக்கும்.

Tags: Priced At Rs.52TVS Star City+அறிமுகமாகிறதுடிவிஎஸ் ஸ்டார் சிட்டி+
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version