Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

யூஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் , கமாண்டோ மொஜாவெ விற்பனைக்கு வந்தது

by MR.Durai
3 September 2017, 8:06 am
in Bike News
0
ShareTweetSend

யூஎம் ரெனிகேட் கமாண்டோ

  • யூஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மற்றும் ரெனிகேட் கமாண்டோ மொஜாவெ என இரு மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
  • 25 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 279.5 சிசி எஞ்சினை பெற்றுள்ளது.
  • மோஜாவே என்பது அமெரிக்காவில் அமைந்துள்ள பாலைவனத்தின் உந்துதலில் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக களமிறங்கிய இந்நிறுவனத்தின் முதல் மாடல்களாக ரெனிகேட் கமாண்டோ மற்றும் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் ஆகிய மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, 10,000 க்கு மேற்பட்ட பைக்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 60 டீலர்களை கொண்டுள்ளது.

 

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட கமாண்டோ கிளாசிக் மாடல் சந்தைக்கு நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதுதவிர கூடுதலாக அமெரிக்காவில் அமைந்துள்ள மோஜாவே பாலைவனத்தின் உந்துதலை கொண்ட பேட்ஜ் பெற்ற மாடலும் விற்பனைக்கு நாடு முழுவதும் உள்ள யூஎம் டீலர்கள் வாயிலாக கிடைக்க தொடங்கியுள்ளது.

இரு மோட்டார் சைக்கிள் மாடலிலும் 25 hp ஆற்றலுடன்,  21.8 Nm டார்கினை வெளிப்படுத்தும்  279.5 சிசி எஞ்சினை பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 41மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் , பின்புறத்தில் இரட்டை சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக் அமைப்பினை கொண்டுள்ளது.

 

ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மாடல் மெட்டலிக் கேன்டி உடன் காப்பர் க்ரீம் மற்றும் மெட்டாலிக் கேண்டி  உடன் கூடிய கிளாஸ் கருப்பு என இரு விதமான நிறங்களிலும், ரெனிகேட் கமாண்டோ மொஜாவெ பைக் மேட் பிரவுன் நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றது.

இரு மாடல்களும் 90 சதவீத எரிபொருள் மற்றும் ஆயில் ஆகியவற்றுடன் 179 கிலோ எடை கொண்டுள்ள நிலையில் நிரந்தர அம்சமாக பெட்டிகள், யூஎஸ்பி சார்ஜர் போர்ட் மற்றும் சர்வீஸ் அலர்ட் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.

யூஎம் ரெனிகேட் கமாண்டோ பைக் விலை பட்டியல்

யூஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் விலை – ரூ. 1.89 லட்சம்

யூஎம் ரெனிகேட் கமாண்டோ மொஜாவெ விலை – ரூ. 1.80 லட்சம்

Related Motor News

யூஎம் லோகியா மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை துவங்கிய FADA

யூஎம் ரெனிகேட் தோர் பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

ஆட்டோ எக்ஸ்போ 2018 : யூஎம் எலெக்ட்ரிக் க்ரூஸர் பைக் வெளியாகின்றது

2017 யூஎம் ரெனிகேட் கமாண்டோ , ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்

யூஎம் பைக்குகள் ரூ.8000 வரை விலை உயர்வு

யூஎம் எதிர்கால பைக் மாடல்கள்

Tags: UM Bikeum motorcycles
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new harley davidson x440t

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

2026 hero xoom 110

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan