யூஎம் ரெனிகேட் கமாண்டோ
- யூஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மற்றும் ரெனிகேட் கமாண்டோ மொஜாவெ என இரு மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
- 25 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 279.5 சிசி எஞ்சினை பெற்றுள்ளது.
- மோஜாவே என்பது அமெரிக்காவில் அமைந்துள்ள பாலைவனத்தின் உந்துதலில் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக களமிறங்கிய இந்நிறுவனத்தின் முதல் மாடல்களாக ரெனிகேட் கமாண்டோ மற்றும் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் ஆகிய மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, 10,000 க்கு மேற்பட்ட பைக்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 60 டீலர்களை கொண்டுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட கமாண்டோ கிளாசிக் மாடல் சந்தைக்கு நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதுதவிர கூடுதலாக அமெரிக்காவில் அமைந்துள்ள மோஜாவே பாலைவனத்தின் உந்துதலை கொண்ட பேட்ஜ் பெற்ற மாடலும் விற்பனைக்கு நாடு முழுவதும் உள்ள யூஎம் டீலர்கள் வாயிலாக கிடைக்க தொடங்கியுள்ளது.
இரு மோட்டார் சைக்கிள் மாடலிலும் 25 hp ஆற்றலுடன், 21.8 Nm டார்கினை வெளிப்படுத்தும் 279.5 சிசி எஞ்சினை பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முன்புறத்தில் 41மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் , பின்புறத்தில் இரட்டை சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக் அமைப்பினை கொண்டுள்ளது.
ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மாடல் மெட்டலிக் கேன்டி உடன் காப்பர் க்ரீம் மற்றும் மெட்டாலிக் கேண்டி உடன் கூடிய கிளாஸ் கருப்பு என இரு விதமான நிறங்களிலும், ரெனிகேட் கமாண்டோ மொஜாவெ பைக் மேட் பிரவுன் நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றது.
இரு மாடல்களும் 90 சதவீத எரிபொருள் மற்றும் ஆயில் ஆகியவற்றுடன் 179 கிலோ எடை கொண்டுள்ள நிலையில் நிரந்தர அம்சமாக பெட்டிகள், யூஎஸ்பி சார்ஜர் போர்ட் மற்றும் சர்வீஸ் அலர்ட் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.
யூஎம் ரெனிகேட் கமாண்டோ பைக் விலை பட்டியல்
யூஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் விலை – ரூ. 1.89 லட்சம்
யூஎம் ரெனிகேட் கமாண்டோ மொஜாவெ விலை – ரூ. 1.80 லட்சம்