Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024 பஜாஜ் பல்சர் N250, F250 பைக்கின் அறிமுக விபரம்

by நிவின் கார்த்தி
26 March 2024, 1:50 pm
in Bike News
0
ShareTweetSend

பஜாஜ் பல்சர் 250

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள N250, F250 என இரு பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பாக பல்சர் வரிசை பைக்குகளில் என்எஸ், என் வரிசைகள் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட்டுடன் வந்துள்ளது.

சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள 2024 பஜாஜ் பல்சர் என் 250, எஃப் 250 மோட்டார்சைக்கிளில் கிடைக்கப் பெற்றுள்ள தகவலின் விபரம் பின்வருமாறு;-

  • பல்சர் 250 டிசைன்: அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் புதிய பாடி கிராபிக்ஸ் சேர்க்ககப்பட்டிருக்கலாம்.
  • யூஎஸ்டி ஃபோர்க்: புதிதாக வரவுள்ள மாடல் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் ஆக அப்சைடு டவுன் ஃபோர்க் பெற உள்ளது.
  • டிஜிட்டல் கிளஸ்ட்டர்: சமீபத்தில் வெளியான பல்சர் பைக்குகளில் இடம்பெற்ற ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறக்கூடும்.

2024 Bajaj Pulsar N250, F250

இரு பைக் மாடலிலும் தற்பொழுது பொருத்தப்பட்டுள்ள டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுக்கு பதிலாக அப்சைடு டவுன் ஃபோர்க் பெறக்கூடும். மேலும் புதியதாக பஜாஜ் ரைட் கனெக்ட் ஆப் இணைப்புடன் கூடிய எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது ஸ்மார்ட்போனின் மொபைல் சிக்னல், எஸ்எம்எஸ் அலர்ட், அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி பெற்றிருக்கும்.

கன்சோலில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சராசரி மைலேஜ், பெட்ரோல் இருப்பு உள்ளிட்ட விவரங்களை பெற்றிருக்கும்.

பல்சர் 250 எஞ்சின் விபரம்

தற்பொழுதுள்ள 249.07cc, SOHC ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

இரு பக்க டயரிலும் 17 அங்குல வீல் பெற்று 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது இணைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சந்தையில் கிடைத்து வருகின்ற பல்சர் என்250 மற்றும் எஃப்250 விலை ரூ.1.50 லட்சத்தில் கிடைக்கின்ற நிலையில் வரவுள்ள புதிய 2024 பல்சர் மாடல் விலை ரூ.8,000 முதல் 12,000 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

Related Motor News

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

பஜாஜ் ஆட்டோவின் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20,000 வரை ஜிஎஸ்டி பலன்கள்.!

சாலையில் 2 கோடி பல்சர் பைக்குகள்..! பஜாஜ் ஆட்டோ சிறப்பு சலுகைகள்.!

பஜாஜ் கோகோ எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

Tags: bajaj autoBajaj PulsarBajaj Pulsar 250
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new yamaha xsr155

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

hero xtreme 160r 4v

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan