வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ஹோண்டா இந்தியா வெளியிட உள்ள புதிய மோட்டார் சைக்கிள் பெயர் ஹெச்’நெஸ் அல்லது ஹைனெஸ் (Honda Highness or H’Ness) என அழைக்கப்படலாம். சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டாவின் ரிபெல் 300 க்ரூஸரின் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக வரவுள்ளது.

ரிபெல் 300 அடிப்படையிலான ஹோண்டா எச்’நெஸ் பைக்கில் 30.4 PS பவர் மற்றும் 27.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 286சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூலிங் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

குறிப்பாக இந்தியாவில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ரூஸர் ஸ்டைல் மாடல் மற்றும் ஜாவா பைக்குகளுக்கு போட்டியிடும் வகையிலான இந்த மாடலை ஹோண்டாவின் பிரீமியம் டீலரான பிங் விங் மூலம் விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்த ஆவனங்களின் மூலம் புதிய ஹோண்டா பைக் பெயர் ஹெச்’நெஸ் என்பது உறுதியாகியுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.2.20 லட்சம் முதல் ரூ.2.70 லட்சத்திற்குள் அமையலாம். அக்டோபர் முதல் வாரத்தில் வரவுள்ள புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக விளங்கும்.