Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது..!

by MR.Durai
28 November 2024, 4:44 pm
in Bike News
0
ShareTweetSend

2025 river indie

ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்பொழுது புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விற்பனைக்கு ரூபாய் 5000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1.43 லட்சத்தில் கிடைக்க துவங்கியுள்ளது.

புதிதாக இண்டி ஸ்கூட்டரில் கிரே மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டு கூடுதலாக ஃபைனல் டிரைவ் தற்போது செயின் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்பு பெல்ட் டிரைவ் ஆனது கொடுக்கப்பட்டிருந்தது. கூடுதலாக ரிவர்ஸ் பொத்தானை பிரத்தியேகமாக வழங்கியுள்ளது.

IP67 மதிப்பிடப்பட்ட 4kwh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கை கொண்டுள்ள இந்த மாடலின் உண்மையான ரேஞ்ச் 120 கிமீ வரை வழங்கும் என கூறப்படுகின்றது. Eco, Ride மற்றும் Rush மூன்று ரைடிங் முறைகளை பெற்ற இண்டி ஸ்கூட்டரில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் 6.7Kw பவர் மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகிறது.

3.9 விநாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 800-watt சார்ஜரை கொண்டு சார்ஜிங் பெற 5 மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.

river indie colours

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விற்பனையில் உள்ள இந்த ஸ்கூட்டர் ஆனது 3000 க்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. பெங்களுரூ,  ஹைத்திராபாத் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தற்போது சென்னை, கோயம்புத்தூர் என இரு மாநகரங்களிலும் முன்பதிவு நடைபெற்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக வேலூர் மாவட்டத்திலும் டீலரை துவக்க ரிவர் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதுதவிர விசாகப்பட்டினம், ஹூப்ளி, கொச்சின், பெல்காம், மைசூர் மற்றும் உப்பல் என பல்வேறு இடங்களில் சுமார் 25 டீலர்களை மார்ச் 2025க்குள் துவங்க உள்ளது.

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் யமஹா நிறுவனம் முதலீடு செய்துள்ளளது.

Related Motor News

2025 இறுதியில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் யமஹா இந்தியா

River Escooter – ரிவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் யமஹா மோட்டார் முதலீடு

மீண்டும் ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது

ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கியது

120 கிமீ ரேஞ்சு.., River Indie எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Tags: River Indie
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் யமஹா XSR155 விற்பனைக்கு வருமா..?

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

2025 Royal Enfield meteor 350 bike

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan