Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024 ஜாவா பெராக், 42 பாபர் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
9 April 2024, 6:37 pm
in Bike News
1
ShareTweetSend

2024 ஜாவா பெராக்

2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா பெராக் மற்றும் 42 பாபர் என இரு மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய பெராக்கில் ஸ்டைலிஷான மேம்பாடுகளுடன் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை.

42 பாபர் பைக்கில் இரண்டு புதிய வேரியண்ட் மற்றும் அலாய் வீல் கொண்ட மாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 29.92ps மற்றும் 32.74Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.  இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இரு பைக்குகளும் பொதுவாக ஒரே மாதிரியாக டிஸ்க் பிரேக் செட்டப் உட்பட டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் முன்புறத்தில் 100/90 – 18, 56H மற்றும் பின்புறத்தில் 140/70 – 17, 66H டயர் உள்ளது.

2024 Jawa Perak

தற்பொழுது வந்துள்ள ஜாவா பெராக்கில் மேட் கிரே மற்றும் மேட் பிளாக் என இரு வண்ண கலவையில் வந்துள்ள மாடலின் ஒற்றை இருக்கை இப்பொழுது டேன் மூலம் கொடுக்கப்பட்டு பெராக் பேட்ஜ் மற்றும் எரிபொருள் நிரப்பும் டேங்கின் கேப் ஆனது பித்தளையில் வந்துள்ளது. வெயில் நேரங்களில் தெளிவாக கிளஸ்ட்டர் பார்வைக்கு தெரியும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மற்றபடி, அமரும் எர்கானமிக்ஸ் மாற்றப்பட்டு கால் வைக்கின்ற ஃபூட் பெக் முன்புறம் 155 மிமீ தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 2024 ஜாவா பெராக் விலை ரூ.2,16,187 (எக்ஸ் ஷோரூம் தமிழ்நாடு) ஆக உள்ளது.

2024 Jawa 42 Bobber

2024 ஜாவா 42 பாபெரில் எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் புதியதாக வந்துள்ள மிஸ்டிக் காப்பர் மற்றும் ஜேஸ்பர் சிவப்பு நிறங்களில் டைமன்ட் கட் அலாய் வீல் சேர்க்கப்பட்டுள்ளது.   ஸ்போக் வீல் மாடலை விட ரூ.6,500 விலை கூடுதலாக இருக்கின்றது. மேலும், ஏற்கனவே ஸ்போக் வீல் கொண்ட மாடல் பயன்படுத்தி வருபவர்கள் அலாய் வீல் மாற்ற ரூ.14,000 தேவைப்படும்.

எல்இடி விளக்குகள், டிஜிட்டல் கிளஸ்ட்டர், USB சார்ஜிங், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை பெறுகின்ற 42 பாபருக்கு நேரடியான போட்டியாளர்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கவில்லை.

Jawa 42 Bobber Variants Prices (ex-showroom, Delhi)
Moonstone White Rs. 2,09,500
Mystic Copper Spoke Wheel Rs. 2,12,500
Mystic Copper Alloy Wheel Rs. 2,18,900
Jasper Red Dual Tone Spoke Wheel Rs. 2,15,187
Jasper Red Dual Tone Alloy Wheel Rs. 2,19,950
Black Mirror Rs. 2,29,500

ஜாவா 42 பாபர்

Related Motor News

ஜிஎஸ்டி 2.0., ஜாவா, யெஸ்டி பைக்குகள் ரூ.17,000 வரை விலை குறைப்பு

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

செப்டம்பர் 3ல் புதிய ஜாவா 42 விற்பனைக்கு வருகை..!

புதிய எஞ்சினுடன் 2024 ஜாவா 42 விற்பனைக்கு அறிமுகமானது

புதிய நிறத்தில் ஜாவா 42 பாபெர் விற்பனைக்கு வெளியானது

ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கு சிறப்பு தீபாவளி சலுகை

Tags: Jawa 42Jawa bikesJawa Perak
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

honda wn7 electric

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Honda CBR1000RR-R Fireblade SP

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan