தமிழ்நாட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் V1 புரோ மற்றும் V1 பிளஸ் என இரண்டு வேரியண்டையும் விலை ₹ 1,19,900 முதல் ₹1,39,900 வரை (எக்ஸ்ஷோரூம் சென்னை) நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியான ஸ்டைலிஷ் அம்சங்களை பெற்றுள்ள வீடா ஸ்கூட்டர் மாடல் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என நான்கு விதமான ரைடிங் மோட் கொண்டதாக அமைந்துள்ளது.

வீடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

மிக நேர்த்தியான ஸ்கூட்டர் தோற்ற அமைப்பினை பெற்ற வீடா வி1 மாடல் ஆக்ரோஷமாக தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு எல்இடி ஹெட்லேம்ப், அகலமான ஃப்ளைஸ்கிரீன், ஸ்வாப்பிங் பாடி பேனல் மற்றும் இரு பிரிவு பெற்ற இருக்கை வடிவமைப்பை கொண்டுள்ளது.

விடா ஸ்கூட்டரின் பிரீமியம் தோற்ற வசதிகளுடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. V1 ப்ரோவில் 3.94kWh பேட்டரியும் V1 Plus மாடல் 3.44kWh பேட்டரியைப் பெறுகிறது.

Vida Escooter Vida V1 Plus Vida V1 Pro
விலை ₹1,19,900 ₹1,39,900
Range 85 km 95 km
அதிகபட்ச வேகம் 80km/h 80km/h
Acceleration 0-40 km/h in 3.4 seconds 0-40 km/h in 3.2 seconds
சார்ஜிங் நேரம் 0-80% charge in 65 minutes 0-80% charge in 65 minutes
பேட்டரி திறன் 3.44kWh battery 3.94 kWh battery

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு சென்னை )

[rank_math_rich_snippet id=”s-59ee76fe-3f6c-4a6e-9dc7-81f945bf9b48″]