Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

யமஹா ஃபேசினோ 125 Fi ஸ்கூட்டரின் சிறப்புகள்

by automobiletamilan
December 20, 2019
in பைக் செய்திகள்

யமஹா ஃபேசினோ 125 fi

125சிசி ஸ்கூட்டர் சந்தையில் நுழைந்துள்ள யமஹா நிறுவனத்தின் முதல் மாடலாக ஃபேசினோ 125 Fi விற்பனைக்கு ரூ.68,450 வெளியிடப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள பிஎஸ்4 மாடலை 113 சிசி என்ஜினிலிருந்து முற்றிலும் நிறுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

ஃபேசினோ 125 மாடலை தொடர்ந்து யமஹா ரே இசட்ஆர் 125 மற்றும் ஸ்டீரிட் ரேலி இசட்ஆர் 125, யமஹா எம்டி-15 மற்றும் ஆர்15 போன்ற மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 2020 ஜனவரி முதல் ஃபேஸினோ 125 விற்பனையை துவங்க யமஹா திட்டமிட்டுள்ளது.

புதிய 125சிசி என்ஜின்

முந்தைய 113சிசி என்ஜின் பதிலாக தற்போது முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட 125சிசி என்ஜின் பெற்றதாக வந்துள்ளது. இந்த என்ஜின் யமஹாவின் ப்ளூ கோர் நுட்பத்தை பெற்றதாக அமைந்துள்ளது. புதிய ஃபேசினோ 125 fi என்ஜின் அதிகபட்சமாக 8.2 ps பவர் மற்றும் 9 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.  முந்தைய என்ஜினுடன் ஒப்பீடுகையில் 30 சதவீத கூடுதல் பவர் மற்றும் 16 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்குகின்றது.

எனவே, யமஹா ஃபேசினோ 125 Fi லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட டிசைன்

99 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ள இந்த மாடலின் முன்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட், ஸ்டைலிஷான பேனல்களை கொண்டு பக்கவாட்டில் ஐரோப்பாவின் கிளாசிக் ஸ்கூட்டர்களின் டிசைன் வடிவத்தை தழுவியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கால் வைக்கின்ற இடம் சற்று அதிகரிக்கப்பட்டு தற்போது 393 மிமீ அகலம் அதிகரிக்கப்பட்டு, 490 மிமீ வரை நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல ஹேண்டில் பார் அமைப்பும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்கூட்டரின் ரைடிங் பொசிஷன் போன்றவை மாற்றியமைக்கப்படுள்ளது.

யமஹா ஃபேசினோ 125

புதிய வசதிகள்

மிக நேர்த்தியான வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஃபேசினோ ஸ்கூட்டரில் ஐடியலாக உள்ள சமயத்தில் என்ஜின் அனைந்து விடும் வகையில் ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் வசதியும், சைடு ஸ்டாண்டு என்ஜின் ஸ்டார்ட் செய்வதனை தடுக்கும் நுட்பம் போன்றவற்றுடன் மல்டி ஃபங்கஷன் கீ, மடிக்கக்கூடிய ஹூக், யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

FASCINO 125 FI

மற்றவை

ஃபேஸினோ ஸ்கூட்டரில் டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான வேரியண்ட் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் பின்பக்கத்தில் ஸ்விங் யூனிட் இணைக்கப்பட்டுள்ளது. முன்புற டயரில் டிரம் அல்லது டிஸ்க் பெறுவதுடன் பின்புற டயரில் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

டிரம் பிரேக் வேரியண்டில் மெட்டாலிக் பிளாக்,மேட் ப்ளூ,சியான் ப்ளூ நிறங்களுடன் சிறப்பு வண்ணமாக டார்க் மேட் ப்ளூ மற்றும் காப்பர் இணைக்கப்பட்டுள்ளது.

டிஸ்க் பிரேக் வேரியண்டில் விவிட் ரெட், மஞ்சள் காக்டெயில்,  மெட்டாலிக் பிளாக்,மேட் ப்ளூ,சியான் ப்ளூ நிறங்களுடன் சிறப்பு வண்ணமாக டார்க் மேட் ப்ளூ மற்றும் காப்பர் இணைக்கப்பட்டுள்ளது.

yamaha FASCINO 125 FI

யமஹா ஃபேசினோ 125 Fi விலை

வேரியண்ட் நிறங்கள் தமிழ்நாடு (எக்ஸ்ஷோரூம்)
Yamaha Fascino 125 FI (Drum) Metallic black, Matte blue, Cyan blue ரூ. 68,450
SPECIAL: Dark matte blue, Suave copper ரூ. 69,450
Yamaha Fascino 125 FI (Disc) Vivid red, Metallic black, Yellow cocktail, Matte blue, Cyan blue ரூ. 70,950
SPECIAL: Dark matte blue, Suave copper ரூ.71,950

FASCINO 125 FI rear

Tags: FASCINO 125 FIYamaha Fascino
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version